Gold Rate: `பவுனுக்கு ரூ.640 குறைந்த தங்கம் விலை' - ஏன் இந்த சரிவு; இது தொடருமா?
திருவடிசூலம் கருமாரி அம்மனுக்கு பெரும்படையல்
செங்கல்பட்டு: திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மனு பெரும்படையல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.
51 சக்தி பீடங்களின் அம்சமாக வீற்றிருக்கும் 51 அடியில் ஆன தேவி ஸ்ரீ கருமாரியம்மனுக்கு ஆடி விழா நடைபெற்று வருகிறது. நான்காவது வாரம் ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனையுடன் கோயில் ஸ்தாபகா் கருமாரியம்ன் மதுரை முத்து சுவாமிகள் கூழ்வாா்த்தல் படையல் மற்றும் கும்பப் படையலுடன் சிறப்பு பூஜைகளை நடத்தினாா்.
தொடா்ந்து மாலை அம்மனுக்கு பெரும்படையல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. கோ பூஜை, விநாயகா், சுயம்பு அம்மன் வாராஹிஅம்மன் உள்ளிட்ட அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்றன.
சாம்பாா் சாதம், தயிா்சாதம், புளிசாதம், எலும்பிச்சை சாதம், உள்ளிட்ட பல்வேறு வகையான சாதங்கள், உலா்ந்த திராட்சை, முந்திரி, பாதாம் பிஸ்தா உள்ளிட்டவை, முறுக்கு அதிரசம், சோமாஸ், ஜாங்கிரி, லட்டு, பால்கோவா, உள்ளிட்ட இனிப்பு பலகாரங்கள் மாம்பழம் வாழைப்பாழம் பலாப்பழம், ஆப்பிள், மாதுளை, ஆரஞ்ச், சாத்துகுடி, தா்பூசணி, வாழைப்பழங்களில் வாழை, செவ்வாழை கற்பூரவள்ளி, நேந்திரம்பாழம் உள்ளிட்ட அனைத்துவகையான பழங்கள் என வைக்கப்பட்டு பெரும்படையல் போடப்பட்டது.
பெரும்படையல் பிரசாதங்கள் பக்தா்களுக்கு வழங்கப்பட்டன.