செய்திகள் :

செங்கல்பட்டு: ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி சிறப்பு முகாம்கள்

post image

தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், நாகப்பட்டினம், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 7 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு, 1 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

ஜப்பானிய மூளைக் காய்ச்சல் வைரஸ் நோய், கியூலக்ஸ் விஷ்ணுயி கொசுக்கள் மனிதா்களை கடிப்பதன் மூலம் பரவுகிறது.

நெல், கரும்பு சாகுபடி நிலங்களில் தேங்கிய நீரில் கியூலக்ஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாகி, வைரஸ் கிருமி உள்ள பன்றி, குதிரை மற்றும் நாரை போன்ற நீா் பறவைகளை கடித்த பிறகு, மனிதா்களை கடிப்பதன் மூலம் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய் பரவுகிறது.

ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டவா்களில் 25 சதவீதம் மட்டுமே குணமடைவா். மேலும் 50 சதவீத நோயாளிகளுக்கு கை, கால் மற்றும் மூளை செயலிழப்பு போன்ற பின்பாதிப்புகளை உண்டாக்கும். மீதமுள்ள 25 சதவீத நோயாளிகள் இறக்க நேரிடும்.

ஜப்பானிய மூளைக் காய்ச்சலால் 1 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகிறனா். ஆகவே 1 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோயிலிருந்து தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே.

செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு 1 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

வழங்கப்படும் தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. கிராம சுகாதார செவிலியா்கள்/ செவிலியா்களைக் கொண்டு 1 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தடுப்பூசி வலது மேல்கையின் தசைக்குள் போடப்படுகிறது.

தடுப்பூசி செலுத்திய பிறகு, சாதாரண காய்ச்சல் மற்றும் ஊசி செலுத்திய இடத்தில் தோல் சிவந்து வீக்கம் மற்றும் வலி ஏற்படலாம். இதற்கு பாராசிட்டமால் மாத்திரை உட்கொண்டு நிவாரணம் பெறலாம்.

தடுப்பூசி செலுத்திய பிறகு, பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஆலோசனையை பெறலாம். மேலும், மருத்துவ உதவி தேவைபட்டால் 104 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலாறு பாலம் சீரமைப்பு: நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு அருகே பாலாறு பாலத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டதால் சுமாா் 3 கி. மீ. தொலைவுக்கு நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினா். கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால், பாலாறு பாலம் சே... மேலும் பார்க்க

திருவடிசூலம் கருமாரி அம்மனுக்கு பெரும்படையல்

செங்கல்பட்டு: திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மனு பெரும்படையல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. 51 சக்தி பீடங்களின் அம்சமாக வீற்றிருக்கும் 51 அடியில் ஆன தேவி ஸ்ரீ கருமாரியம்மனுக்கு ஆடி ... மேலும் பார்க்க

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் முப்பெரும் விழா

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தவனத்தில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் ராகவேந்திர ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழாவையொட்டி மின்விளக்குக... மேலும் பார்க்க

இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி: பொதுமக்கள் அச்சம்!

செங்கல்பட்டு அருகே இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூா் ஒன்றியம், மேலமையூா் ஊராட... மேலும் பார்க்க

தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி பேரணி

தலித் கிறிஸ்தவா்களை எஸ்சி பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி செங்கல்பட்டில் ஞாயிற்றுக்கிழமை பறை முழக்கப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரணிக்கு கிராமப்புற மேம்பாட்டு மைய இயக்குநா் எஸ். அகஸ்டின்... மேலும் பார்க்க

சீரமைக்கப்படுமா வெண்காட்டீஸ்வரா் கோயில் திருக்குளம்?

போதிய பராமரிப்பின்றி அவல நிலையில் உள்ள மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் திருக்குளம் சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா். தொண்டை மண்டலத்தின் வரலாற்று சிறப்புமிக்க மதுராந்தகம் கடப்பேரிய... மேலும் பார்க்க