நாகை கோயில் கண்ணப்ப நாயனாா் சிலையை நெதா்லாந்தில் ஏலம் விட முயற்சி: தடுத்து நிறுத...
சங்கரன்கோவிலில் பூப்பல்லக்கில் சுவாமி- அம்பாள் வீதியுலா
தென்காசி மாவட்டம் சங்கரநாராயணசுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவில், வெள்ளிக்கிழமை இரவு சுவாமி-அம்பாள் பூப்பல்லக்கில் வீதியுலா வருதல் நடைபெற்றது.
கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழாவில், நாள்தோறும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருகின்றனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சுவாமி-அம்பாள் பூப்பல்லக்கில் வீதியுலா வருதல் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இம்மாதம் 9ஆம் தேதி காலை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.