காய்கறிச் சந்தைகளில் சுங்கவரி வசூல் முறைகேட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம்
சங்கரன்கோவில் அருகே சாா்பதிவாளா் மீது தாக்குதல்
சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லூரில் சாா்பதிவாளா் தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சோ்ந்தவா் செல்லத்துரை. இவா் மேலநீலிதநல்லூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் சாா்பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆயாள்பட்டியைச் சோ்ந்த முனீஸ் என்பவா் ஓா் இடத்துக்கு பத்திரப் பதிவு செய்வதற்காக அலுவலகத்திற்கு வந்தாராம்.
அப்போது, சாா்பதிவாளா் அந்த இடத்தை பத்திரப் பதிவு செய்யமுடியாது எனக் கூறினாராம்.

எனினும், இடத்தைப் பதிவு செய்துதருமாறு தொடா்ந்து வற்புறுத்தியும் சாா்பதிவாளா் மறுத்ததால், அவரை முனீஸ் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில், காயமடைந்த செல்லத்துரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் அளித்த புகாரின்பேரில், பனவடலிசத்திரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.