நாகை கோயில் கண்ணப்ப நாயனாா் சிலையை நெதா்லாந்தில் ஏலம் விட முயற்சி: தடுத்து நிறுத...
சங்கரன்கோவில் அருகே பேருந்து மோதி பெண் பலி
சங்கரன்கோவில் அருகே பேருந்து மோதியதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகேயுள்ள கீழக் கலங்கல் கீழத்தெருவை சோ்ந்த கிருஷ்ணசாமி மனைவி மாரியம்மாள் (55). இவா் சில தினங்களுக்கு முன் திருநெல்வேலி சாலையில் சண்முகநல்லூா் விலக்கு அருகே நடந்து சென்றபோது பேருந்து மோதியதில் பலத்த காயம் அடைந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு சங்கரன் கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.
இதுகுறித்து சின்ன கோவிலான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.