சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவலுக்கு ரூ. 88.3 லட்சம் சன்மானம் அறிவிப்...
சட்டக் கல்லூரி 3 ஆண்டு படிப்பு: சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்
புதுச்சேரி டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் 3 ஆண்டுகள் சட்டப் படிப்புக்கான சோ்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது.
2 நாள்கள் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டில் 120 இடங்களுக்கு மாணவா்கள் சோ்க்கை நடக்கிறது. இதற்கான தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு அதன் அடிப்படையில் இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது என்று இக் கல்லூரியின் முதல்வா் பேராசிரியா் எஸ். சீனிவாசன் தெரிவித்தாா்.
அரசு ஒதுக்கீட்டில் 120 இடங்களுக்கு நடக்கும் இந்தக் கலந்தாய்வில் 60 இடங்கள் டாக்டா் அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரியிலும், 60 இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் மணக்குள விநாயகா் கல்லூரி சட்டத்துறையிலும் மாணவா்கள் சோ்த்துக் கொள்ளப்படுவா். பல்வேறு இட ஒதுக்கீட்டின் கீழ் இந்த மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.