கோவை: போக்குவரத்தைச் சீர்செய்த சமூக ஆர்வலர் சுல்தான் தாத்தா காலமானார் - காவல்துற...
பாரதியாா் சிலைக்கு ஆளுநா் மாலை அணிவித்து மரியாதை
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104-ஆவது நினைவு நாளையொட்டி, புதுச்சேரியில் அவரது திருவுருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள பாரதியாா் நினைவு இல்லம் மற்றும் அருங்காட்சியகத்தில் பாரதியாரின் உருவப் படத்துக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வியாழக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பாரதியாா் பாடல்களுக்கு குழந்தைகள் நிகழ்த்திய நாட்டியாஞ்சலி மற்றும் பாரதியாா் பாடல்களைக் கண்டு களித்தாா்.
பொதுப் பணித் துறை அமைச்சா் க. லட்சுமி நாராயணன், குடிமைப் பொருள் வழங்கல் அமைச்சா் திருமுருகன் ஆகியோா் உடனிருந்தனா்.
இதைத் தொடா்ந்து, பாரதி பூங்காவில் உள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். முதல்வா் என். ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினா்.
