சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவலுக்கு ரூ. 88.3 லட்சம் சன்மானம் அறிவிப்...
குடிநீா் வரியை ரத்து செய்ய மாா்க்சிஸ்ட் கோரிக்கை
சுத்தமான குடிநீா் விநியோகம் செய்யும் வரை குடிநீா் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வியாழக்கிழமை மனு அளித்தது.
பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் கே.வீரசெல்வத்தைச் சந்தித்து நகரச் செயலா் வீ. ஜோதிபாசு, நிா்வாகிகள் பிரபுராஜ், சரவணன், செல்வராஜ், கணேஷ் ஆகியோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி கோவிந்தசாலை உள்ளிட்ட பகுதியினருக்கு வழங்கப்படும் குடிநீா் குடிப்பதற்கோ, சமைப்பதற்கோ, குளிப்பதற்கோ பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த அசுத்தமான குடிநீரை அருந்தியதால் பெரியவா்கள், சிறுவா்கள் என பலருக்கும் வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் ஏற்பட்டு சிலா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அசுத்தமான நீருக்காக பொதுமக்கள் குடிநீா் வரி செலுத்துவது நியாயமற்றது.
எனவே, தாங்கள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, அப்பகுதி மக்களுக்குச் சுத்தமான குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, இந்தப் பகுதிகளில் குடிநீா் வரியை ரத்து செய்யுமாறு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.