தூய்மையான குடிநீா் விநியோகம் கோரி புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
புதுச்சேரியில் தூய்மையான குடிநீா் விநியோகம் செய்ய அரசை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உருளையன்பேட்டை தொகுதியில் மாசு கலந்த குடிநீா் விநியோகம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், என்.ஆா். காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் சுகாதாரமான குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தியும் பொதுப் பணித் துறை தலைமை அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் நகரக் குழு மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிக் குழு சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் தலைமை வகித்தாா். கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் தினேஷ் பொன்னையா, கோவிந்தசாமி, அந்தோணி, எழிலன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.