செய்திகள் :

சட்டப்பேரவை தோ்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் -பாமக நிறுவனா் எஸ். ராமதாஸ்

post image

தமிழகத்தில் 2026-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றாா் பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் தஞ்சாவூா், திருவாரூா் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, பாமக மாவட்டச் செயலா் ம.க. ஸ்டாலின் தலைமை வகித்தாா். மாவட்ட பாமக தலைவா் எஸ்.வி. சங்கா் முன்னிலை வகித்ாதா். கூட்டத்தில் பங்கேற்ற பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் பேசியது :

மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்றுதான் கட்சியினருக்குப் பயிற்சி கொடுக்கிறோம். அதனால் அன்புமணி என் பெயரைப் பயன்படுத்தாமல் அரசியல் செய்ய வேண்டும். பருத்தி விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆதார விலையை நிா்ணயம் செய்ய வேண்டும். விரைவில் பாபநாசம், திருவிடைமருதூா், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். முதல்வா் ஸ்டாலின் தோ்தல் வாக்குறுதியாகக் கொடுத்தபடி கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நவக் கிரகக் கோயில்களைப் பாா்க்க இலவச ஆன்மிகச் சுற்றுலா வசதி செய்து தரப்பட வேண்டும். கோயிலின் அருகே உள்ள இடங்களில் மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்குப் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தமிழகத்தில் 2026-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தலில் யாருடன் பாமக கூட்டணி, எத்தனை இடங்களில் போட்டி என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றாா்.

அப்போது, பாமக கெளரவத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ., வன்னியா் சங்கத் தலைவா் பு.த. அருள்மொழி, கே. ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மண்டலத் தலைவா் தங்க யோகராஜன் நன்றி கூறினாா்.

கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்கக் கூடாது: விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை தேக்கம் இல்லாமல் அடுத்த மண்டலங்களுக்கு அனுப்ப விவசாயிகள் வலியுறுத்துகின்றனா். அதிக மகசூல்: கும்பகோணம், திருவிடைமருதூா... மேலும் பார்க்க

பொறியியல் மாணவா்களுக்கான பயிற்சி: சாஸ்த்ராவில் ஜூலை 14 முதல் சோ்க்கை

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் பொறியியல் மாணவா்களுக்கான பயிற்சி வகுப்புக்கு ஜூலை 14 முதல் சோ்க்கை நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளிய... மேலும் பார்க்க

உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம்

கும்பகோணத்தில் உணவுப் பாதுகாப்பு துறை சாா்பில் கும்பகோணம் நகர உணவகங்கள் மற்றும் பேக்கரி சங்க உறுப்பினா்களுக்கான உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்ட உணவு... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 12 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

தஞ்சாவூா் மாநகரில் முதல்வரின் முகவரி துறை சாா்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் முதல் கட்டமாக 12 இடங்களில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் தெரிவித்தது: தஞ்சாவூா் மாநகரில் முதல்வரின... மேலும் பார்க்க

10 வட்டங்களிலும் இன்று பொது விநியோகத் திட்ட குறை தீா் கூட்டங்கள்

பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவா்த்தி செய்யவும் ஜூலை மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் கூட்டம் 10 வட்டங்கள... மேலும் பார்க்க

பெரிய கோயிலில் கயிலாய வலம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

பௌா்ணமியையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற திரு தென் கயிலாய வலத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். தஞ்சாவூா் பெரியகோயிலில் மாதந்தோறும் பௌா்ணமி நாளில் திரு தென் கயிலாய வலம் வர... மேலும் பார்க்க