செய்திகள் :

சட்டமன்றம்: முதல்வர் பேசுகையில் அதிமுக வெளிநடப்பு செய்தது ஏன்? - ஆர்.பி உதயகுமார் சொன்ன காரணம்

post image

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்து, தற்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மகாவீர் ஜெயந்தி, தமிழ்புத்தாண்டு, வார விடுமுறைகள் என 5 நாள்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் அவை கூடியது. இந்த நிலையில், ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, மாநில சுயாட்சி தொடர்பாக சட்டப்பேரவை விதி 110 கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டு பேசினார். முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போதே அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்பாவு

சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், ``கேள்வி நேரம் முடியும் வரை அமைதியாக இருந்தோம். பூஜ்ய நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்ப சட்டமன்ற அவைத் தலைவரிடம் அனுமதி கேட்டபோது, பல்வேறு காரணங்களைக் கூறி தட்டிக்கழிக்கிறார்ரே தவிர பேசுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. பேரவை விதி 72-ன் கீழ், அமைச்சர்கள் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது விவாதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். ஆனால் சபாநாயகர் தொடர்ந்து ஜனநாயக படுகொலையை செய்துவருகிறார்." என்றார்.

Kidney Stone: கிட்னி ஸ்டோன் வராமல் தடுக்க முடியுமா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

சிறுநீரகக் கற்கள் உருவாக காரணங்கள்; எப்படிக் கண்டறிவது; சிறுநீரகக் கற்கள் தடுக்க, தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என சொல்கிறார், சிறுநீரகவியல் நிபுணர் என்.ஆனந்தன். சிறுநீரகக் கல்சிறுநீரகக் கற்கள் உருவாக ... மேலும் பார்க்க

`நான் இருக்கும் இடத்தில் இடைவிடாத குண்டு சத்தம் கேட்கிறது' - ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் நகரம் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டு, இருள் நிறைந... மேலும் பார்க்க

Pakistan: தீவிரமடையும் பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. பாகிஸ்தானின் நிலை என்ன?

பாகிஸ்தான், இந்தியா உடனான மோதலில் எல்லை மீறிய தாக்குதலில் ஈடுபட்டுவரும் அதேவேளையில் பாகிஸ்தானுக்குள் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தின் பகுதிகளைக் கைப்பற்றியுள்ள பலூச் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் ராண... மேலும் பார்க்க

300-400 ட்ரோன்களை பயன்படுத்தி தாக்கிய பாகிஸ்தான்; இந்தியா முறியடித்தது எப்படி?

பாகிஸ்தான் ராணுவம் லே முதல் சர் கிரிக் பகுதிவரை இந்திய ராணுவ தளங்களைக் குறிவைத்து 36 இடங்களில் 300 முதல் 400 ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விங் ... மேலும் பார்க்க

``பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயற்சி..'' - இந்திய அரசு தகவல்!

நேற்றைய இரவு பாகிஸ்தான் மற்றும் இந்தியா எல்லையில் தீவிரமான துப்பாக்கிச் சூடு, பீரங்கி தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடந்துள்ள நிலையில், இன்றைய நிலவரம் மற்றும் தயாரிப்புகள் குறித்து விளக்க இந்... மேலும் பார்க்க

Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்

இந்தியா - பாகிஸ்தான் மோதலில் ஆந்திர பிரதேசம் மாநிலம், ஶ்ரீ சத்ய சாய் மாவட்டம், கோரண்ட்லா மண்டல் பகுதியில் புட்டகுண்டலபள்ளேகிராமத்துக்கு அருகில் உள்ள கல்லி தண்டா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீர... மேலும் பார்க்க