Mamata Banerjee: "போலி இந்துத்துவம்; இந்து கார்டை பயன்படுத்தாதீர்கள்"- பாஜக தலைவ...
சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது!
புது தில்லியின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறுபவர்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், சிறப்பு அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் தனிப்படை அமைத்து மேற்கொண்ட நடவடிக்கையில் உரிய ஆவணங்களின்றி இந்தியாவில் குடியேறி தில்லியின் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 11 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க:ஔரங்கசீப் கல்லறை அழிக்கப்பட வேண்டும்: சிவசேனை எம்.பி.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள ஹமீதா (வயது 75), நபீஸன் (65), ரஹீமா (55), முஹம்மது சுஹைல் (31), லாலி காட்டுன் (24), அன்வர் (55), அஹ்மது கபீர் (50), முஹம்மது பாட்ஷா ஃபகீர் (38) மற்றும் அஸ்லம் (25) உள்பட 2 குழந்தைகள் மீது இந்திய வெளிநாட்டவர் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், அவர்களை தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச்.10 அன்று இதேபோல் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.