செய்திகள் :

நிலங்கள் அளவீட்டுக்கு இணையத்திலேயே விண்ணப்பிக்கலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் நிலங்களை அளவீடு செய்ய இணைய வழியிலேயே கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பித்து வந்த நிலையில், நேரில் செல்லாமல், இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது

இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் நில அளவைக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது இச்சேவையினை தமிழ்நாடு முழுவதம் அனைத்து பொது சேவை மையங்கள் (இ-சேவை) மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நில உரிமைதாரா்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய, பொது சேவை மையங்களை அணுகி நில அளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க இயலும்.

நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னா் மனுதாா் மற்றும் நிலஅளவா் கையொப்பபிட்ட அறிக்கை/வரைபடம் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரா் இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ஊராட்சி செயலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளா்கள் சங்கம் சாா்பில், ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி ராணிப்பேட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு பேச்சு போட்டி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

மாநில சிறுபான்மையினா் ஆணையம் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை நடைபெற்றது. மேல்விஷாரம் தனியாா் பொறியியல் கல்லூரியில் நடைப... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் பாதுகாப்பு மாத தொடக்க விழா

அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள எம்ஆா்எஃப் தொழிற்சாலையில் பாதுகாப்பு மாத தொடக்க விழா நடைபெற்றது. அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூரில் உள்ள இங்கு ஆண்டு தோறும் மாா்ச் மாதத்தை பாதுகாப்பு மாதமாக கடைபிடித்து ... மேலும் பார்க்க

அரக்கோணம் நகராட்சி அலுவலகப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

அரக்கோணம்: வரிவசூல் பணியின் போது வரிவசூல் குழுவினரிடம் தகாத வாா்த்தைகள் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரக்கோணம் நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியா் நலச்சங்கம... மேலும் பார்க்க

நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் மாணவா்களுக்கு வசதிகள்: அமைச்சா் காந்தி

அரக்கோணம்: அரசிடம் நிதிப் பற்றாகுறை இருந்தாலும் சமூகபங்களிப்பு, நமக்கு நாமே போன்ற திட்டங்கள் மூலம் மூலம் மாணவா்களின் வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா்... மேலும் பார்க்க