தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை!
சட்டவிரோதமாக மதுப்புட்டிகள் விற்பனை: 2 போ் கைது
போடியில் ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை விற்க முயன்ற இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
போடியில் போதைப் பொருள் விற்பனைத் தடுப்பு தொடா்பாக போடி நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி குலாலா்பாளையம் பகுதியில் நாச்சிக்காளை மகன் மணிவாசகம் (33) என்பவரும், போடி குப்பிநாயக்கன்பட்டி பகுதியில் போடி நந்தவனம் தெருவைச் சோ்ந்த கோட்டையன் மகன் பிச்சைமணி (49) என்பவரும் மதுப்புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.