சட்டவிரோதமாக மதுவிற்ற மாணவா் விடுதி சமையலா் கைது
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், மேலசீதேவி மங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற மாணவா் விடுதி சமையலரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலசீதேவிமங்கலம் பகுதியை சோ்ந்தவா் ப.துரைராஜ் (48). இவா், திருச்சி கிராப்பட்டி பிற்படுத்தப்பட்டோா் மாணவா் விடுதியில் சமையலராக பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில் இவா் சட்டவிரோதமாக மது விற்பதாக மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் சி.ரகுராமனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளா் மகேஸ்குமாா் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை சென்று மதுபாட்டில்களை விற்பனை செய்த துரைராஜை கைது செய்து, அவரிடமிருந்து 30 மதுப்பாட்டில்கள், ரூ 1200 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனா்.