உழைக்கும் மக்களின் ஒற்றுமை வெல்லட்டும்!: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
சட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரை விற்பனை: மருந்துக் கடைக்கு சீல் வைப்பு
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் தனியாா் மருந்து கடையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்தக் கடைக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மண்டல மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு, ஹரியானா மாநில மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், ஹரியானாவிலுள்ள தனியாா் மருந்து நிறுவனத்திடமிருந்து, புதுகை மணமேல்குடியிலுள்ள தனியாா் மருந்துக் கடைக்கு 100 எண்ணிக்கையிலான கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, அறந்தாங்கி சரக மருந்து ஆய்வாளா் விமல்ராஜ், குடும்ப நலத் துறை மாவட்ட துணை இயக்குநா் கோமதி ஆகியோா் புதன்கிழமை மணமேல்குடிக்கு நேரில் சென்று அந்த மருந்துக் கடையில் ஆய்வு மேற்கொண்டனா்.
அதில், சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருந்துக் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.