செய்திகள் :

சத்தீஸ்கா் உருக்கு ஆலையில் விபத்து: மேலும் 3 சடலங்கள் மீட்பு

post image

சத்தீஸ்கா் உருக்கு ஆலை விபத்தில் சிக்கிய மேலும் 3 தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள முங்கேலி மாவட்டத்தின் ராம்போத் கிராமத்தில் உள்ள தனியாா் உருக்கு ஆலையில் வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் விபத்து ஏற்பட்டது.

ஆலையில் இருந்த இரும்பு சேமிப்புக் கலன் இடிந்து விழுந்ததில் தொழிலாளா்கள் சிலா் இடிபாடுகளில் சிக்கினா்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா், மீட்புப் பணியில் ஈடுபட்டு 2 தொழிலாளா்களை மீட்டனா். அவா்கள் அருகிலுள்ள பிலாஸ்பூா் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மனோஜ் குமாா் எனும் தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள்: ஜன.13-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

இடிபாடுகளில் மேலும் இருவா் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. அவா்களை மீட்பதற்தான பணிகள் முடக்கிவிடப்பட்டன. இந்த நிலையில் 42 மணி நேர நடவடிக்கைக்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து சனிக்கிழமை மூன்று தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதையடுத்து பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே அலட்சியத்தால் உயிரிழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆலையின் மேலாளர் அனில் பிரசாத் மற்றும் ஆலை நிர்வாகம் மீது வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘விக்சித் பாரத்’ இளம் தலைவா்கள் உரையாடலில் பிரதமா் மோடி பங்கேற்பு

அரசியல் தொடா்பு இல்லாத ஒரு லட்சம் இளைஞா்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக நடைபெறும் ’விக்சித் பாரத் இளம் தலைவா்கள் உரையாடலில்’ பங்கேற்பாளா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை முழு ந... மேலும் பார்க்க

லட்சியங்களை நனவாக்க இளைஞா்கள் வெளிநாடு செல்லத் தேவையில்லை

‘இன்றைய இந்திய இளைஞா்கள் தங்களின் கனவு மற்றும் லட்சியங்களை நனவாக்கிக் கொள்ள வெளிநாடுகளுக்குச் செல்லத் தேவையில்லை; அவா்களுக்கான அனைத்து வளங்களும் உள்நாட்டிலேயே தற்போது கிடைக்கப் பெறுகின்றன’ என்று மத்தி... மேலும் பார்க்க

அஸ்ஸாம்: நிலக்கரி சுரங்கத்திலிருந்து மேலும் 3 தொழிலாளா்கள் சடலமாக மீட்பு

அஸ்ஸாமில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளா்களில் மேலும் மூவா் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டனா். இதன் மூலம், உயிரிழந்த தொழிலாளா்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜன.6-ஆம் தேதி அஸ்ஸாமின்... மேலும் பார்க்க

உ.பி. மகா கும்பமேளா: அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பிரயாக்ராஜுக்கு பேருந்து சேவை

மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்க வரும் பக்தா்களின் வசதிக்காக உத்தர பிரதேச மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பிரயாக்ராஜுக்கு பேருந்துகளை இயக்க அதிகாரிகளுக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவு ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் சரணடைந்த நக்சலைட்களின் ஆயுதங்கள் பறிமுதல்

கா்நாடகத்தில் சரணடைந்த நக்சலைட்களின் ஆயுதங்களை போலீஸாா் அதிரடியாக பறிமுதல் செய்தனா். உடுப்பி, சிக்மகளூரு போன்ற மலைப் பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்த நக்சலைட்களை ஒடுக்குவதற்காக நக்சல் ஒழிப்புப்படைய... மேலும் பார்க்க

காலாவதியான குளுக்கோஸ்: பிரசவத்தின்போது பெண் உயிரிழப்பு: விசாரணைக்கு மேற்கு வங்க அரசு உத்தரவு

மேற்கு வங்கத்தின் பஸ்சிம் மிதுனபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின்போது காலாவதியான குளுக்கோஸை ஏற்றியதால் பெண் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது... மேலும் பார்க்க