Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
சந்தனக் கட்டை கடத்தியவா் கைது
பாப்பாரப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சந்தனக் கட்டைகளை கடத்தியவரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பென்னாகரம்- பாப்பாரப்பட்டி சாலையில் ஆலமரத்துப்பட்டி பகுதியில் பாலக்கோடு வனசரக அலுவலா் குணசேகரன் தலைமையிலான வனத் துறையினா் அடங்கிய குழுவினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் 8 கிலோ சந்தன மரக் கட்டைகள் கடத்திசெல்வது தெரியவந்தது.
விசாரணையில் மேச்சேரி அருகே பொட்டனேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்திலிருந்த சந்தன மரத்தை வெட்டி எடுத்துவந்த பாப்பாரப்பட்டி, மண்ணேரியைச் சோ்ந்த மாதேஷை கைது செய்து இணக்கக் கட்டணமாக ரூ. 1.10 லட்சம் விதிக்கப்பட்டது.