செய்திகள் :

``சபரிமலை ஐயப்பனின் திருவபரண அலங்காரத்தை பெண்களும் தரிசிக்கலாம்" பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா கோயில்!

post image

சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு மகரவிளக்கு அன்று திருவாபரணங்கள் சாற்றி பூஜைகள் நடப்பது நமக்குத் தெரியும். சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு சாற்றப்படும் அதே திருவாபரணங்கள் பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தாவுக்கு சாற்றி வழிபடும் ஆச்சர்ய நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஐயப்ப சுவாமி வளர்ந்த இடமான பந்தளத்தில் இருந்து கடந்த12-ம் தேதி புறப்பட்ட திருவாபரணம் மகரவிளக்கு தினமான நேற்று (14-ம் தேதி) சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து மகரஜோதி தரிசனம் நடைபெற்றதும்.

பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா கோயில்

வரும் 7 நாள்கள் திருவாபரண அலங்காரத்தில் சபரிமலை ஐயப்ப சுவாமி காட்சிதருவார். பின்னர் சபரிமலையில் இருந்து திருவாபரணங்கள் மீண்டும் புறப்பட்டு பத்தனம்திட்டா மாவட்டத்தில் ரானி என்ற இடத்துக்கு அருகே அமைந்துள்ள பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலிலுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட அதே திருவாபரணங்கள் பெருநாடு தர்மசாஸ்தாவுக்கு அணிவிக்கப்படும்.

இந்த நிகழ்வு வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. சபரிமலையில் ஐயப்ப சுவாமியின் திருவாபரண காட்சியை தரிசிக்க இயலாத பக்தர்களுக்கு மற்றொரு வாய்ப்பாக பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தாவுக்கு அதே ஆபரணங்கள் சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா கோயில்தான் சபரிமலைக்கு மூலஸ்தானம் என கருதப்படுவதால்  இந்த ஆச்சர்ய நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது என்கிறார்கள்.

மனோகரன் நாயர்

இதுபற்றி பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா கோயில் ஆலோசனைக்குழு துணைத்தலைவர் மனோகரன் நாயர் கூறுகையில், "ரானி பெருநாட்டில் உள்ள ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலில் சபரிமலையில் உள்ளது போன்றே ஐயப்பன் யோக நிலையில் சின்முத்ராதாரியாக அமர்ந்து காட்சிதருகிறார். ஐயப்ப சுவாமியின் விருப்பப்படி சபரிமலையில் கோயில் அமைப்பதற்காக பந்தளம் மஹாராஜா ரானி பெருநாட்டில் தங்கியிருந்து அந்த பணிகளை மேற்கொண்டார்.

சபரிமலை கோயில் அமைப்பதற்கு முன்பு ஐயப்ப சுவாமி கோயிலை நிர்மாணித்து, தினசரி பூஜைகளை மேற்கொண்ட புண்ணிய ஸ்தலமாகும் பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா கோயில். நைஸ்டிக பிரம்மச்சாரியான ஐயப்ப சுவாமியை அனைத்து வயது பெண்களும் இத்திருத்தலத்தில் தரிசிக்கலாம். அதனால்தான் பெண்களின் சபரிமலை என பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா கோயில் அழைக்கப்படுகிறது.

பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா கோயில்

பந்தளம் மஹாராஜா ஐயப்ப சுவாமிக்கு வழங்கிய திருவரணங்கள் கடந்த மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் சாற்றப்படும். 7 நாள்கள் சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு திருவபரணங்கள் சாற்றப்பட்ட பிறகு மீண்டும் பந்தளம் கோயிலுக்கு கொண்டுசெல்லும் வழியில் பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு சுவாமிக்கு சாற்றப்படும். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த அபூர்வ நிகழ்வு இந்த வருடம் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. அன்று மதியம் 2 மணிமுதல் இரவு 2 மணி வரை திருவாபரணங்கள் சாற்றப்பட்டு பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா காட்சிதருகிறார். திருவாபரண காட்சியை அனைத்து வயது பெண்களும் தரிசிக்கலாம்" என்றார்.

மஹரசங்கராந்தி : தஞ்சாவூர் பெரிய கோயில் நந்திக்கு 2,000 கிலோ காய், கனி, இனிப்புகளில் அலங்காரம்

உலகப்புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் பெங்கல் விழாவான நேற்று மாலை, மகாநந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்களப் பொருட்களால், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏர... மேலும் பார்க்க

பொங்கல் தரிசனம்: `காசி முதல் திருக்கழுக்குன்றம் வரை'- அபூர்வ பலன்களை அருளும் சூரிய தலங்கள்

சூரிய பகவான், சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்ற திருத்தலங்கள் ஏராளம். அவற்றுள் முதன்மையானது காசி. இங்கு, 12 திருநாமங்களுடன் 12 இடங்களில் எழுந்தருளி உள்ளார் சூரியன். இந்த பன்னிரண்டு ஆதித்தியர் (சூரியன்)க... மேலும் பார்க்க

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு! - கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய மக்கள்! - Album

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு.! கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய மக்கள்.! மேலும் பார்க்க

மனம் விரும்பும் புண்ணிய ஸ்தலங்கள் - என் புத்தாண்டு அனுபவப் பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

நெல்லை: பாளை ஸ்ரீ இராஜகோபாலன் சுவாமி கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா; ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஸ்ரீ இராஜகோபாலன் சுவாமி திருக்கோயிலில் சுவாமி எழுந்தருளும் சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்க... மேலும் பார்க்க