செய்திகள் :

சபரிமலை வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மு - பம்பாவில் இருமுடிகட்டி ஐயப்பனை தரிசிக்கிறார்!

post image

ஜனாதிபதி திரெளபதி முர்மு சபரிமலை சென்று ஐயப்ப சுவாமியை தரிசிக்க உள்ளதாக கடந்த மே மாதம் தெரிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களால் ஜனாதிபதி சபரிமலை வருகை ரத்துச் செய்யப்பட்டது. இந்த நிலையில் வரும் 22-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு சபரிமலை சென்று ஐயப்ப சுவாமியை தரிசிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடை திறப்பு

ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்க உள்ளநிலையில் 22-ம் தேதி வரை நடை திறந்திருக்கும். ஜனாதிபதி தரிசனம் செய்வதை முன்னிட்டு வரும் 22-ம் தேதி ஆன்லைன் முன்பதிவுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி திரௌபதி முர்மு வரும் 21-ம் தேதி மாலை 6.30 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் வருகிறார். அன்று இரவு ராஜ்பவனில் தங்குகிறார் 22-ம் தேதி காலை 9.30 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் செல்கிறார். நிலக்கல்லில் இருந்து கார் மூலமாக பம்பா செல்கிறார். பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டி அங்கிருந்து திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் பிரத்தியேக வாகனம் மூலம் சுவாமி ஐயப்பன் சாலை வழியாக சபரிமலை சன்னிதானத்தை அடைகிறார்.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

மதியம் 12.20 முதல் ஒரு மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சன்னிதானத்தில் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்கிறார். தொடர்ந்து சன்னிதானத்தில் கெஸ்ட் ஹவுஸில் உணவருந்திவிட்டு, ஓய்வெடுக்கிறார். மாலை 3 மணிக்கு பிரத்தியேக வாகனம் மூலம் மீண்டும் நிலக்கல்லை அடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தை அடைகிறார்.

அன்று மாலை திருவனந்தபுரத்தில் தனியார் ஹோட்டலில் கேரள கவர்னர் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்கிறார். இரவு ராஜ்பவனில் ஓய்வெடுக்கும் அவர் 23-ம் தேதி காலை ராஜ்பவன் வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.

ஜனாதிபதி திரெளபதி முர்மு

23-ம் தேதி மதியம் 12.40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் வர்க்கலா சிவகிரி செல்லும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஸ்ரீநாராயண குருவின் மகாசமாதி நூற்றாண்டு நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் பாலா செயிண்ட் தாமஸ் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்கிறார். அன்று இரவு கோட்டயம் குமரகத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். 24-ம் தேதி காலை கோட்டயத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கொச்சி சென்று அங்கு புனித தெரசா கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். மாலை 4 மணிக்கு கொச்சி விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் முதல் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆவார். அவரது வருகையைத் தொடர்ந்து சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில்: பூ வாக்குக் கேட்டுத் தொடங்கினால் சுபிட்சம் பெருகும்!

கோட்டை மாரியம்மன்கோட்டை மாரியம்மன் என்றதும் பலரின் நினைவுக்கும் வருவது திண்டுக்கல் மற்றும் சேலத்தில் இருக்கும் கோட்டை மாரியம்மன் கோயில்கள்தாம். ராணுவக் கோட்டைகளாக இருந்த இடத்தில் எழுந்தருளி இருக்கும் ... மேலும் பார்க்க

திருக்கோவிலூர் அருகே ஓர் திருவரங்கம்; ஞானம் கூடும், மன அழகும் தோற்றப்பொலிவும் கூடும்!

திருவரங்கம் என்றால் புண்ணிய நதியான காவிரிக்கு நடுவே அமைந்த தீவுப் பகுதி என்றும் அதில் திருமால் சயனத் திருக்கோலத்தில் அருள்வார் என்பதும் ஐதிகம். பஞ்சரங்கம்கர்நாடக மாநிலத்தில் அமைந்த ஸ்ரீரங்கப்பட்டினத்த... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டம் அறகண்டநல்லூர்: 1,300 ஆண்டுகள் பழைமையான தலம், சனி தோஷம் தீரும் அற்புதம்!

நம் தேசம் முழுவதும் உள்ள சிவத்தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் முக்கியமானவை. அவற்றின் மகிமைகள் சொல்லில் அடங்காதவை. அப்படிப்பட்ட தலங்களைச் சென்று தரிசிக்கும்போதே நம் மனமும் ஆன்மாவும் மகிழ்வதை நம்மா... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதியிலிருந்து வந்த பட்டு வஸ்திரம்; ஆண்டாளுக்கு அணிவித்து சிறப்பு பூஜை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து திருப்பதி திருமலை புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழாவிற்கு கருட சேவையின்போது மலையப்ப சாமி அணிவதற்காக ஆண்டாள் சூடி களைந்த மாலை, பட்டு வஸ்திரம... மேலும் பார்க்க

வேலூர் ஞானமலை: 'ஞானம் பிறக்கும்; நோய்கள் தீரும்' - முருகனின் பாதம் பதிந்த திருப்புகழ் தலம்!

வேலூர் மாவட்டத்தில் வள்ளிமலை மிகவும் பிரசித்திபெற்றது. அந்த மாவட்டத்திலேயே முருகப்பெருமானின் திருவடி பட்ட ஒரு மலை ஒன்று உண்டு என்பது பலரும் அறியாதது. சுற்றிலும் வெப்பாலை மரங்கள் உயர்ந்து நிற்க சிறிய ம... மேலும் பார்க்க

குருவின் அருளைப் பெற்று தரும் கால பைரவ பூஜை; 7 காரணங்களுக்காக இந்தப் பரிகாரம்

அதிசார குருபெயர்ச்சி உங்களுக்கு நன்மைகள் தர, துன்பங்கள் நீங்க 14-10-2025 தேய்பிறை அஷ்டமி நன்னாளில் அவல்பூந்துறை ஊரை அடுத்த ராட்டைச் சுற்றிபாளையம் ஆலயத்தில் மகாகால பைரவ பூஜை நடைபெற உள்ளது.முன்பதிவு மற்... மேலும் பார்க்க