செய்திகள் :

சபரீசனின் தந்தை காலமானார்! முதல்வரின் நாளைய நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

post image

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (வயது 80) உடல்நலக் குறைவால் புதன்கிழமை நள்ளிரவு காலமானார்.

சென்னை ஓ.எம்.ஆர்-இல் உள்ள தனியார் மருத்துவமனையில் வயதுமூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த வேதமூர்த்தி சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

அவரது உடல் கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இன்றும் நாளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளவிருந்த நிலையில், நாளைய நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Chief Minister M.K. Stalin's son-in-law Sabareesan's father Vedhamurthy (aged 80) passed away on Wednesday midnight.

இதையும் படிக்க : வாழப்பாடி அருகே கவிழ்ந்த ஆம்னி பேருந்து: தொழிலதிபர் பலி; 5 பேர் படுகாயம்!

மனைவி, கள்ளக் காதலன் தலையினை வெட்டிக் கொலை செய்த கணவர்!

கள்ளக்குறிச்சி: மலைக்கோட்டாலம் கிராமத்தில் மனைவி மற்றொறுவருடன் தனிமையில் இருந்ததைப் பார்த்த கணவர் கொடுவாளால் இருவரது தலையை வெட்டி பையில் எடுத்துக் கொண்டு வேலூர் மத்திய சிறையின் முன்பாக நின்று கொண்டிரு... மேலும் பார்க்க

கோவையில் அக். 9,10-ல் உலக புத்தொழில் மாநாடு: முதல்வர் ஸ்டாலின்

கோயம்புத்தூரில் வரும் அக். 9,10 ஆகிய தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் இன்று (செப். 11) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக... மேலும் பார்க்க

மின்சுற்றுப் பலகை உற்பத்தி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், எல்காட் ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புதிதாக நிறுவவுள்ள மல்டிலேயர் எச்டிஐ பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் உற்பத்தி திட்டத்த... மேலும் பார்க்க

ஓசூர் மாநாட்டில் 92 ஒப்பந்தங்கள் மூலம் 49,353 வேலைவாய்ப்பு!

ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை!

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தென்னிந்திய பகுத... மேலும் பார்க்க

ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அன்புமணியை நீக்குவதற்கு ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று கட்சியின் மூத்த நிர்வாகி வழக்கறிஞர் கே. பாலு தெரிவித்துள்ளார்.பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நோட்டீஸுக்கு பத... மேலும் பார்க்க