செய்திகள் :

சமூக ஊடகங்கள் பொழுதுபோக்குக்கான இடம் மட்டுமே; கல்வியே மூலதனம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

post image

சென்னை: சமூக ஊடகங்கள் பொழுதுபோக்குக்கான இடம் மட்டுமே; ஆனால், கல்வியே மூலதனம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்வியாளர்கள் சார்பில் முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாடு மக்களுக்கு கிடைத்த வெற்றி. மாநில சுயாட்சி நாயகர்கள் யாரென்றால், அது நான் இல்லை; தமிழ்நாட்டு மக்கள்தான். திமுகவுக்கு வாக்களித்த மக்கள்தான் மாநில சுயாட்சி நாயகர்கள்.” 

“மத்திய அரசின் ஒரு ஏஜென்ட்டாக இருக்கும்ள ஆளுநர், திட்டங்களை தடுக்க முடியும் என்றால் மக்கள் செலுத்தும் வாக்குக்கு என்ன மரியாதை? ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய வெற்றி.  ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களையும் சட்டமாக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.”

“திராவிட மாடல் அரசு இளைஞர்களுக்கான அரசு. பகுத்தறிவுக்கான எதிரான மூட நம்பிக்கைகளை பரப்பும் இடமாக கல்வி நிறுவனங்கள் இருக்கக் கூடாது. மூட நம்பிக்கைகளை பரப்பும் செயலில் கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”

“எல்லாவற்றுக்கும் கல்வி தான் அடிப்படை. கல்விதான் யாராலும் பிரிக்க முடியாத சொத்து. ரோல் மாடல்களை வலைதளங்களில் தேடாதீர்கள். சமூக வலைதளங்கள் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. படிக்காமல் ரீல்ஸ் போட்டு சம்பாதிக்கலாம் என்று எண்ண வேண்டாம். எந்தத் தடை வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து நாங்கள் நிச்சயம் உங்களை படிக்க வைப்போம்” என்றார்.

பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து படுகொலை!

பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பட்டுக்கோட்டை அருகே கடையை பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்ற 35 வயது பெண்ணை திங்கள்கிழமை நள்ளி... மேலும் பார்க்க

ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 6) சவரனுக்கு ரூ. 2000 உயர்ந்து ரூ. 72,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை கடந்த சில நாள்களாக குறைந்துவந்த நிலையில், மே 3-ஆம் தேதி விலையில் மாற்றமின்... மேலும் பார்க்க

உதகை தொட்டபெட்டா காட்சி முனை செல்வோர் கவனத்துக்கு....!

காட்டு யானையின் நடமாட்டம் உள்ளதால் உதகை தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல இன்று(மே 6) ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், உதகை வனப் பகுதியில் தற்போது வறட்சி நிலவும் நிலையில் விலங்குகள் உ... மேலும் பார்க்க

வைகோ மருத்துவமனையில் அனுமதி!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் எம்பியுமான வைகோ, வீட்டில் தவறிவிழுந்ததில் கை விரலில் காயம் ஏற்... மேலும் பார்க்க

மின்னனு சாதனங்கள் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடம்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் உறுதி

சென்னை: நமது நாட்டில் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா். இந்தி... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி அமைந்த பிறகு வணிகா்களுக்கு முழு பாதுகாப்பு: எடப்பாடி பழனிசாமி உறுதி

சென்னை: தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு வணிகா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தாா். சென்னை அருகே மறைமலை நகரி... மேலும் பார்க்க