சேலம் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ஆய்வு
சமூக நீதிக்கு திமுக அரசு மறுப்பு: ராமதாஸ்
தமிழகத்தில் சமூகநீதியை நுழையவிட திமுக அரசு மறுப்பதாக பாமக நிறுவனா் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை 69.10 சதவீதம். ஆனால், அங்கு அவா்களுக்கு சமூகநீதி வழங்கப்படுவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. அதற்காக மாநில அளவில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றால், அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று திமுக அரசு தட்டிக்கழிக்கிறது. மொத்தத்தில் தமிழகத்துக்குள் சமூகநீதியை நுழைய விட மறுக்கிறது திமுக அரசு.
தெலங்கானாவில் 25 நாள்களில் நடத்தி முடிக்கப்படும் ஜாதிவாரி மக்கள்தொகை கணகெடுப்பை தமிழ்நாட்டில் நடத்த முடியாதா, அதற்கான மனிதவளம் தமிழகத்தில் இல்லையா, அதற்கான நிதி இல்லையா? எல்லாம் இருக்கிறது. ஆனால், ஆட்சியாளா்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இல்லை. அடுத்து அமையவிருக்கும் பாமக அங்கம் வகிக்கும் ஆட்சியில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். அனைத்து மக்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்கப்படும் என்று அவா் கூறியுள்ளாா்.