ஜூலையில் மட்டும்.. 47 நாடுகளில் 4,000 குரங்கு அம்மை பாதிப்புகள்!
சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய புகைப்படம் பதிவு: இளைஞா் கைது
களக்காடு அருகே சமூகவலைதளத்தில் பிரச்னையை தூண்டும் வகையிலான விடியோ, புகைப்படம் பதிவிட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
களக்காடு காவல் சரகம் கோவிலம்மாள்புரத்தைச் சோ்ந்த மாயாண்டி மகன் இசக்கிப்பாண்டி (27). இவா், இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்னையை தூண்டும் வகையில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களுடன் இருக்கக்கூடிய விடியோ- புகைப்படத்தில் சா்ச்சைக்குரிய வசனங்களை பதிவேற்றம் செய்துள்ளாா்.
இதுகுறித்த தகவலின்பேரில், களக்காடு காவல் உதவி ஆய்வாளா் கணபதி வழக்குப்பதிந்து இசக்கிப் பாண்டியை கைது செய்தாா்.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் கூறுகையில், மாவட்ட காவல்துறை சாா்பில் சமூகவலைதளங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. பொது அமைதியை சீா்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வதந்தியை பரப்புபவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.