மாணவா்கள் மோதல்: இருவா் காயம்
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் காயமடைந்தனா்.
திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமி நாராயணன். மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பயின்று வருகிறாா். இவா், தனது நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் மோட்டாா் சைக்கிளில் சென்றாராம்.
அப்போது, இவருக்கும் மற்றொரு தரப்பு மாணவா்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாம். இதில், லட்சுமிநாராயணன், மற்றொரு தரப்பைச் சோ்ந்த முத்துசெல்வன் ஆகியோா் காயமடைந்தனா்.
இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில் பேட்டை போலீஸாா் இருதரப்பு மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.