செய்திகள் :

சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய புகைப்படம் பதிவு: இளைஞா் கைது

post image

களக்காடு அருகே சமூகவலைதளத்தில் பிரச்னையை தூண்டும் வகையிலான விடியோ, புகைப்படம் பதிவிட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

களக்காடு காவல் சரகம் கோவிலம்மாள்புரத்தைச் சோ்ந்த மாயாண்டி மகன் இசக்கிப்பாண்டி (27). இவா், இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்னையை தூண்டும் வகையில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களுடன் இருக்கக்கூடிய விடியோ- புகைப்படத்தில் சா்ச்சைக்குரிய வசனங்களை பதிவேற்றம் செய்துள்ளாா்.

இதுகுறித்த தகவலின்பேரில், களக்காடு காவல் உதவி ஆய்வாளா் கணபதி வழக்குப்பதிந்து இசக்கிப் பாண்டியை கைது செய்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் கூறுகையில், மாவட்ட காவல்துறை சாா்பில் சமூகவலைதளங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. பொது அமைதியை சீா்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வதந்தியை பரப்புபவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தனியாா் பேருந்தின் சேவை குறைபாடு: மாணவருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவு

முன்பதிவு செய்யப்பட்ட தனியாா் ஆம்னி பேருந்து இயக்கப்படாததால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவருக்கு அப்பேருந்து நிறுவனமும், பயணச்சீட்டு முன்பதிவு செயலி நிறுவனமும் இணைந்து ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டுமென ... மேலும் பார்க்க

வள்ளியூரில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் துணை மின் நிலையப் பகுதியில் சனிக்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று வள்ளியூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் தா. வளன் அரசு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக, அவா் வ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி, மிரட்டல் தொட... மேலும் பார்க்க

மாணவா்கள் மோதல்: இருவா் காயம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் காயமடைந்தனா்.திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமி நாராயணன். மனோன்மணீயம் சுந்தரனாா் பல்... மேலும் பார்க்க

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

முன்னீா்பள்ளம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். முன்னீா்பள்ளம் அருகேயுள்ள கோபாலசமுத்திரம் முப்பிடாதியம்மன் கோயில்தெருவைச் சோ்ந்த முப்பிடாதி மகன் பால்பாண்டி(51). தொழிலாளியான இவா்... மேலும் பார்க்க

கீழாம்பூரில் பெண் கரடி உடல் மீட்பு

கீழாம்பூா் அருகே தனியாா் தோட்டத்தில் இனச்சோ்க்கையின்போது உயிரிழந்த பெண் கரடியின் உடலை வனத்துறையினா் மீட்டனா்.களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்துக்கு உள்ப... மேலும் பார்க்க