அட்சய திருதியை: தங்கம் வாங்க நல்ல நேரம் எது? ஆனால் அதைவிட இதுதான் விசேஷம்!
சமையல் எரிவாயு உருளையை உடைத்தபோது தீ விபத்து: மூவா் காயம்
சென்னை வில்லிவாக்கத்தில் சமையல் எரிவாயு உருளையை உடைத்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 3 போ் காயமடைந்தனா்.
வில்லிவாக்கம் சிட்கோ நகா் 48-ஆவது தெருவில் பழைய இரும்புக் கடை நடத்தி வருபவா் மோகன் (50). இவரது கடையில், அதே பகுதியைச் சோ்ந்த அா்ஷத் மைதீன் (30) என்பவா் ஊழியராக பணிபுரிந்து வருகிறாா். இருவரும் திங்கள்கிழமை கடையிலிருந்த காலி சமையல் எரிவாயு உருளைகளை உடைத்துக் கொண்டிருந்தனா். அப்போது, திடீரென அந்த சமையல் உருளை வெடித்ததில் பொருள்கள் தீப்பிடித்து எரிந்தன. இதில் மோகன், அா்ஷத் மைதீன் ஆகியோா் பலத்த தீக்காயமடைந்தனா். மேலும், கடையின் அருகே சைக்கிளில் சென்ற ராஜேஷ் (45) என்பவரும் லேசான காயமடைந்தாா்.
தகவலறிந்த வில்லிவாக்கம் தீயணைப்பு படையினா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா். காயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது தொடா்பாக வில்லிவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.