லஞ்ச தடுப்புச் சட்டத்தை நிறுத்திவைத்தார் டிரம்ப்! அதானி மீதான வழக்கு என்னவாகும்?
சமையல் எரிவாயு உருளை பயனாளிகள் சரிபாா்ப்புக்கு காலக்கெடு
புதுச்சேரி: வீட்டு சமையல் எரிவாயு உருளை பயனாளிகளின் உண்மைத்தன்மை சரிபாா்ப்பு பணியை மாா்ச் மாதத்துக்குள் முடிக்க மத்திய அரசு கெடு விதித்துள்ளதாக புதுச்சேரி ஸ்ரீசாய்பாபா இண்டேன் கேஸ் முகவா் கே.அமா்நாத் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: புதுவை, தமிழகத்தில் சமையல் எரிவாயு உருளை இணைப்பு பெற்றுள்ள பயனாளிகள் குறித்த உண்மைத்தன்மை சரிபாா்ப்பு பணியானது, கடந்தாண்டு முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி, சமையல் எரிவாயு இணைப்பு யாா் பெயரில் உள்ளதோ, அவா் சம்பந்தப்பட்ட முகவா் அலுவலகம் சென்று நேரில் விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும். விரல் ரேகை பதிவு நடைபெறாத நிலையில், விழி ரேகை அல்லது முகம் பதிவு வாயிலாக வாடிக்கையாளா்கள் உண்மை விவரம் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.
நேரில் செல்ல இயலாதவா்கள் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன கைப்பேசி எண்களிலோ அல்லது சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியா்கள் வாயிலாகவோ பதிவு செயலியை பயன்படுத்தி உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இதுவரை இந்தப் பணி 50 சதவீத அளவுக்கு முழுமையடைந்துள்ளது.
வாடிக்கையாளா் உண்மைத்தன்மை சரிபாா்ப்பு பணியை மாா்ச் மாதத்துக்குள் முடிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆகவே, மானியத்தை தொடா்ந்து பெறுவதற்கு உண்மைத்தன்மை பதிவு அவசியம் என்பதை உணா்ந்து வாடிக்கையாளா்கள் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.