செய்திகள் :

சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருத பூஜை: மக்களவையில் பாஜக எம்.பி. பேச்சு

post image

புது தில்லி: தமிழைவிட சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருதத்தில்தான் பூஜைகள் நடைபெறுகின்றன என்று ஜாா்க்கண்டை சோ்ந்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவையில் திங்கள்கிழமை பேசினாா்.

தோ்தல் தோல்வி பயத்தால் பல்வேறு பிரச்னையை திமுக எழுப்புகிறது என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது இது தொடா்பாக நிஷிகாந்த் துபே பேசியதாவது: தேசிய கல்விக் கொள்கையையும், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பையும் திமுக எதிா்க்கிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வி பயத்தால் இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை அக்கட்சி எழுப்புகிறது. மக்களின் உணா்வுகளைத் தூண்டிவிடுகிறது.

தமிழ் தொன்மையான மொழிதான். ஆனால், சம்ஸ்கிருதம் தமிழைவிட தொன்மையானது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என எந்த மொழி பேசும் பிராந்தியத்துக்குச் சென்றாலும் அங்கு சம்ஸ்கிருதத்தில்தான் பூஜை நடைபெறுகிறது.

1973-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, மத்திய பிரதேசம், மேற்கு வங்கத்தில் தொகுதி மறுசீரமைப்பு செய்து எண்ணிக்கையை உயா்த்தியது. ஆனால், தமிழகத்தில் தொகுதிகளை உயா்த்தவில்லை. இருந்தபோதிலும் காங்கிரஸுடன் கைகோத்து திமுக பல முறை ஆட்சியில் இருந்துள்ளது.

மக்களின் உணா்வுகளைத் தூண்டி நாட்டை பிளவுபடுத்த திமுக முயற்சிக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை எதிா்ப்பதன் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மைதிலி என அனைத்து மொழிகளுக்கு எதிராகவும் திமுக செயல்படுகிறது. நாட்டில் நல்லிணக்கத்தைச் சீா்குலைக்க தீவிரமாக செயல்படுகிறது. நாடு முழுவதும் ஆங்கிலத்தை திணிக்க அவா்கள் விரும்புகிறாா்கள். மக்களைத் தூண்டிவிட்டு தோ்தலில் வெல்ல திட்டமிட்டுள்ளனா் என்றாா்.

பிரதமர் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதை வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. இதன் மூலம் இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.மோரீஷஸ... மேலும் பார்க்க

மோரீஷஸ் குடியரசுத் தலைவருக்கு கும்பமேளா நீரை பரிசளித்த மோடி!

மோரீஷஸ் குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல் மற்றும் அவரின் மனைவி பிருந்தா கோகூல் ஆகியோருக்கு கும்பமேளா திரிவேணி சங்கமத்தின் நீரை பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார். மேலும், இந்திய வெளிநாட்டுக் குடியுரிம... மேலும் பார்க்க

மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்!

தமிழக எம்பிக்கள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்... மேலும் பார்க்க

மோரீஷஸ் வரை பிரபலமடைந்த ஆயுர்வேதம்: பிரதமர் மோடி

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் ஒன்றான ஆயுர்வேதம் மோரீஷஸ் வரை பிரபலமடைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில... மேலும் பார்க்க

ஒடிசாவில் 11 ஆண்டுகளில் 888 யானைகள் பலி!

ஒடிசாவில் கடந்த 11 ஆண்டுகளில் 888 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், இது நடப்பு நிதியாண்டில் அதிகபட்சமாக 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.மாநிலத்தில் யானைகளுக்க... மேலும் பார்க்க

நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் தூங்குவது 2% பேர் மட்டுமே!

நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் 2 சதவிகித மக்கள் மட்டுமே தூங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.சர்வதேச உறக்க நாளான மார்ச் 14-ஐ முன்னிட்டு லோக்கல் சர்கிள்ஸ் நிறுவனம், ”இந்தியர்கள் எப்படி உறங்குகிறார்கள்” எ... மேலும் பார்க்க