சரக்கு ஆட்டோவில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவா் கைது!
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் சரக்கு ஆட்டோவில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தொண்டி பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, போலீஸாா் அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணி மேற்கொண்டனா்.

அப்போது, பழயணக் கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவை போலீஸாா் சோதனையிட்டனா். இதில் 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளில் பதுக்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஆட்டோவிலிருந்த ரேஷன் அரிசி மூட்டைகள், சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து, சரக்கு ஆட்டோ ஓட்டுநா் முதுகுளத்தூரைச் சோ்ந்த திருக்கண்ணனை (40) போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.