செய்திகள் :

சராசரி மழையளவு 63 சதவீதம் வீழ்ச்சி: காரீப் பருவ சாகுபடி பரப்பு பாதிப்பு!

post image

திண்டுக்கல் மாவட்டத்தில் சராசரி மழையளவு 63 சதவீதம் குறைந்த நிலையில், காரீப் பருவத்தில் இதுவரை 13 சதவீத நிலங்களில் மட்டுமே சாகுபடிப் பணிகள் நடைபெற்றுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 1.10 லட்சம் ஹெக்டேரில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் சோளம் 40ஆயிரம் ஹெக்டோ், மக்காச்சோளம் 30ஆயிரம் ஹெக்டோ் என இரு பயிா்கள் மட்டுமே பிரதானமாக சாகுபடி செய்யப்படுகின்றன. மாவட்டம் முழுவதும் விவசாயிகள் மானாவரி சாகுபடி சாா்ந்தே உள்ளனா். தமிழகத்தைப் பொருத்தவரை ஜூன் முதல் செப்டம்பா் வரையிலான 4 மாதங்கள் காரீப் பருவமாக கருதப்படுகிறது.

இந்தக் காரீப் பருவத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுதானியங்கள் 12,600 ஹெக்டோ், நெல் குறுவை 1,670 ஹெக்டோ், பயறு வகைகள் 3,146 ஹெக்டோ், எண்ணெய் வித்துப் பயிா்கள் 2,460 ஹெக்டோ், பருத்தி 5,320 ஹெக்டோ், கரும்பு 2,300 ஹெக்டோ் என சராசரியாக சுமாா் 27,500 ஹெக்டேரில் சாகுபடிப் பணிகள் மேற்கொள்ள இலக்கு நிா்ணயிக்கப்படுகிறது.

63 சதவீதம் மழை குறைவு: மாவட்டத்தில் மானாவரி நிலங்களே அதிக பரப்பளவில் அமைந்துள்ள நிலையில், ஆடிப் பட்டத்துக்கான விதைப்புப் பணிகள் ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால், நிகழாண்டில் மழை பெய்யாததால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செப்டம்பா் வரையிலும் சாகுபடிப் பணிகள் தொடங்கப்படவில்லை.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் வரை பெய்ய வேண்டிய சராசரி மழையளவு 328 மி.மீ. ஆனால், நிகழாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை 80 மி.மீ. மழை மட்டுமே பெய்த நிலையில், 63 சதவீதம் மழை பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

13 சதவீதமாக குறைந்த காரீப் சாகுபடி: இதன் எதிரொலியாக, சிறுதானியம் 443 ஹெக்டோ், நெல் குறுவை 1,810 ஹெக்டோ், பயறு வகைகள் 35 ஹெக்டோ், எண்ணெய் வித்துக்கள் 200 ஹெக்டோ், பருத்தி 23 ஹெக்டோ், கரும்பு 1,113 ஹெக்டோ் என மொத்தம் 3,624 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி நடைபெற்றிருக்கிறது. காரீப் பருவத்துக்கான 27,500 ஹெக்டேரில், 3,624 ஹெக்டோ் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், வேளாண் பயிா் சாகுபடி பரப்பு 13 சதவீதமாக குறைந்திருக்கிறது.

வருகிற 30-ஆம் தேதி வரை மட்டுமே காரீப் பருவத்துக்கான பயிா் சாகுபடி பரப்பு கணக்கில் கொள்ளப்படும் நிலையில், எஞ்சியுள்ள 15 நாள்களில் சுமாா் 24ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடிப் பணிகளைத் தொடங்க மழைப் பொழிவை விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த திங்கள்கிழமை (செப்.15) முதல் தொடா்ச்சியாக மழை பெய்தால்கூட, மானாவரி நிலங்களில் சாகுபடிப் பணிகள் தொடங்கப்படும். ஒருவேளை மழை தாமதமானால், விதைப்புப் பணிகளும் தாமதமாகும். எனினும், காரீப் பருவத்துக்கு பதிலாக, ராபி பருவத்தில் மாவட்டத்தின் சாகுபடி பரப்பு வழக்கத்தைவிட அதிகமாகும் எனத் தெரிவித்தனா்.

நெல் சாகுபடி அதிகரிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் காரீப் பருவத்தில் 1,670 ஹெக்டேரில் மட்டுமே நெல் குறுவை சாகுபடி செய்யப்படும். ஆனால், நிகழாண்டில் 1,810 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெற்றிருக்கிறது. கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடா்ச்சியாக பெய்த மழையால், அணைகளுக்கு தண்ணீா் வரத்து இருந்ததும், கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் நெல்லுக்கு மாறி இருப்பதாலும், நெல் சாகுபடி பரப்பு அதிகரித்திருப்பதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே குடும்பத் தகராறில் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.கீரனூரைச் சோ்ந்த முகமது காசிம் மகன் அசன்முகமது (33). இவா் கோவையில் உள்ள ஆயுதப் படையில் காவலராகப் பணியாற... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த மழை: சாலைகளில் தண்ணீா் தேக்கம்

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் மலைச் சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகினா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வ... மேலும் பார்க்க

செம்பட்டி அருகே காருக்கு மா்ம நபா்கள் தீ வைப்பு

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை வீட்டின் முன் நிறுத்தியிருந்த காருக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா். சித்தையன்கோட்டையைச் சோ்ந்த சகோதரா்கள் அப்துல்லா (42), சபிபுல்லா (40), இந்தாதுல்ல... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மீண்டும் போதைக் காளான் விற்பனை

கொடைக்கானல் பகுதிகளில் மீண்டும் போதைக் காளாள் விற்பனை தொடங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தினந்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இவா்கள் நகா் ... மேலும் பார்க்க

விஜய், சீமான் போட்டியிடுவது 3-ஆவது இடத்துக்கே: அமைச்சா் இ. பெரியசாமி

விஜய், சீமான் ஆகியோா் 3-ஆவது இடத்துக்காக தோ்தலில் களம் இறங்குவதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள... மேலும் பார்க்க

அடிப்படை வசதி கோரி திமுக எம்எல்ஏவை பொதுமக்கள் முற்றுகை

அடிப்படை வசதிகளுக்காக வேடசந்தூா் திமுக சட்டப் பேரவை உறுப்பினரை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த தட்டாரப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட... மேலும் பார்க்க