செய்திகள் :

``சரியானவர்களை பின்பற்ற வேண்டும்; இல்லையென்றால் தவறாக வழிநடத்தப்படுவோம்'' - இயக்குநர் வெற்றிமாறன்

post image

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன், "சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை இதையெல்லாம் நாம் எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது. அப்படிச் செய்தால் நாம் தவறாக வழிநடத்தப்படுவோம்." என்று மாணவர்களிடையே பேசியிருக்கிறார்.

இதுகுறித்து பேசியிருக்கும், "மனிதர்கள் 'socio political animal' என்று சொல்வார்கள். 'Political' அப்படி என்றால், தேர்தல் அரசியல் கிடையாது. நாம் யார், எந்தச் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வோடு இருப்பது ரொம்ப முக்கியம்."

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

நாம் எதை இலக்காக வைத்துக்கொள்ளப்போகிறோம், எதை நோக்கிப் பயணிக்கப்போகிறோம், எதற்காகப் பின்னால் போகப்போகிறோம், யார் பின்னால் போகப்போகிறோம், அவர் சரியான ஆளா என எல்லாமே நமக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் எது சரி? எது தவறு? எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது என்று தெரிந்திருக்க வேண்டும். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று பாருங்கள், படியுங்கள், வாசியுங்கள்.

இந்தச் சமூகம் இன்றைக்கு என்னவாக இயங்கிக்கொண்டிருக்கிறது, சமூகத்தை இயங்க வைப்பது எது? என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும், ரொம்ப விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை இதையெல்லாம் நாம் எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் நாம் தவறாக வழிநடத்தப்படுவோம்." என்று பேசியிருக்கிறார்.

What to watch - Theatre & OTT: இட்லி கடை, காந்தாரா, Sunny Sanskari; இந்த ஆயுத பூஜை ரிலீஸ்கள்

இட்லி கடை (தமிழ்)இட்லி கடை தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் 'இட்லி கடை' படம் இன்று (அக்டோபர் 1) திரையரங்குகளில் வெளியாகிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்தி... மேலும் பார்க்க

புதிய ரேஸ் கார், புதிய ட்ராக்; ஆசிய லீ மான்ஸ் தொடரில் களமிறங்கும் அஜித்!

நடிகர் அஜித் குமார் தனது முழு கவனத்தையும் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.அஜித் குமார் ரேஸிங் நிறுவனத்தை தொடங்கி, அதைப் பல்வேறு உலக நாடுகளின் கார் பந்தயப் போட்டிகளிலும் பங்கெடுக்கச் செய்துவருகிறா... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "உயிரிழந்தோரைக் கண்டு பெருந்துயர் கொள்கிறோம்" - STR49 படக்குழு

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பரப்புரையில் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த சோகம் நடைபெற்றது.கரூர் சோகம்விஜய்யைக் காணக் கூடியவர்களில் பலர் க... மேலும் பார்க்க

Sasikumar: "என் வளர்ச்சிக்காக இந்தப் படத்தில சசி அண்ணா நடிக்க ஒத்துக்கிட்டாரு" -'யாத்திசை' இயக்குநர்

‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. 2023-ம் ஆண்டு தரணி ராசேந்திரன் இயக்கத்தில்... மேலும் பார்க்க