செய்திகள் :

`சாகும் வரை சிறை' - ரயிலில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்; தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு

post image

ந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த 36 வயது பெண், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு வந்தார். அப்போது, அதே கம்பெனியில் வேலைப் பார்த்துவந்த கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்குப் பிறகு அந்தத் தம்பதி திருப்பூரையே சொந்த ஊராக்கிக் கொண்டனர். 19 வயதில் கல்லூரிக்குச் செல்லும் மகன் உள்ள நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு கடந்த 2024 நவம்பர் மாதம், அவர்களே எதிர்பார்க்காமல் இரண்டாவது முறையாகக் கருத்தரித்தார் அந்தப் பெண். `மகள் பிறக்க வேண்டும்’ என்கிற கனவில் ஆசை ஆசையாக இருந்தார்கள் அந்தத் தம்பதியர்.

இந்த நிலையில்தான் கடந்த 6-2-2025 அன்று, சித்தூரில் உள்ள தனது பெற்றோரைப் பார்ப்பதற்காக மகிழ்ச்சியுடன் திருப்பூரில் இருந்து திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்டு வந்துகொண்டிருந்தார் அந்தக் கர்ப்பிணி பெண். அன்று காலை 11 மணி... திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்திப்பை ரயில் வந்தடைந்தபோது, கர்ப்பிணி பெண்ணுடன் பயணித்த ஏழு பெண்களும் அங்கு இறங்கிவிட்டனர். இதனால், கர்ப்பிணி மட்டும் தனியாக பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ரயில்
ரயில்

இதைக் கவனித்த காமுகன் ஒருவன், ரயில் புறப்பட்ட வேகத்தில் ஓடிச்சென்று பெட்டிக்குள் அத்துமீறி ஏறினான். ரயில் வேலூர் நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தபோது, திடீரென கர்ப்பிணி மீது பாய்ந்த அந்த காமுகன் பாலியல் வன்கொடுமைச் செய்ய முயன்றதோடு, எதிர்த்துப் போராடிய அந்தப் பெண்ணின் ஒருக் கையையும் உடைத்து, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டான். தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் வயிற்றில் இருந்த நான்கு மாத கருவும் சிதைந்துபோய் இதயத் துடிப்பு நின்றது. தொடர் சிகிச்சைக்குப் பிறகு பெண்ணின் உடல்நிலை சீரானது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமையைக் கண்ணீரோடு விவரிக்கும் வீடியோவும் வெளியாகி, நெஞ்சை உறைய செய்தது. `` `என் வயித்துல குழந்தை இருக்கு. உனக்கும் அக்கா, தங்கச்சிங்க இருப்பாங்க. தயவு செஞ்சி என்னை விட்டுடு தம்பி’னு அவன்கிட்ட அரைமணி நேரம் போராடுனேன். எனக்கு நடந்தா மாதிரி வேற எந்த பொண்ணுக்கும் நடக்கக் கூடாது. அந்த சைகோவை வெளிய விடாதீங்க. மக்கள் கொடுக்கச் சொல்லும் தண்டனையைக் கொடுங்க. பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லாமப் போய்டுச்சி’’ என்று நடுக்கம் குறையாமல் பேசியிருந்தது, தமிழ்நாட்டையே உலுக்கியது.

இதையடுத்து, கொடூர இச்சையில் ஈடுபட்ட காமுகனும் கைது செய்யப்பட்டான். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகிலுள்ள சின்ன நாகல் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதே ஆன ஹேமராஜ் என்பவன்தான் அந்த பாலியல் கொடூரன். போலீஸார் துரத்திப் பிடிக்கும்போது கீழே விழுந்ததில் ஹேமராஜிக்கும் இடது கால் முறிந்துபோனது. இவன் மீது கொலை முயற்சி, தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் உள்பட ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிறக்காத குழந்தைக்கும் மரணத்தை ஏற்படுத்தியதால், அது கொலைக் குற்றமாக கருதப்பட்டு பிஎன்எஸ் 92-வது பிரிவும் கூடுதலாக சேர்க்கப்பட்டது.

கொடூர காமுகன் ஹேமராஜ்

இதைத் தொடர்ந்து, கொடூரன் ஹேமராஜின் பின்னணிக் குறித்து வெளியான தகவல்கள் அனைத்துமே அதிர்ச்சி ரகம். இந்த வழக்கோடு சேர்த்து, ஏற்கெனவே கொலை உள்பட பெண்களுக்கெதிரான மூன்று பெருங்குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறான் ஹேமராஜ்.

கடந்த 2022 நவம்பர் மாதம், சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் வேலூர் கண்டோன்மென்ட் செல்லக்கூடிய பயணிகள் ரயிலில் பயணம் செய்துவந்தார். சிக்னல் காரணமாக ரயிலின் வேகம் குறைந்தபோது, வேகமாக ஓடிவந்து ஏறிய ஹேமராஜ் அந்தப் பெண்ணிடமிருந்து செல்போன் பறிக்க முயன்றான். செல்போனை விடாமல் இறுக்கமாகப் பிடித்துகொண்டிருந்த பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு தானும் எகிறி குதித்து ஓடிவிட்டான். அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் அப்பெண் உயிர்த் தப்பினார்.

ஹேமராஜும் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டிருந்தான். 11 மாதங்கள் சிறையில் இருந்த ஹேமராஜ் வெளியே வந்த பிறகு சென்னைக்குச் சென்றான்.

அங்குள்ள செல்போன் கடையில் சிம் கார்டு வாங்கியபோது, அங்கு வேலைப் பார்த்த தீபா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கணவரைப் பிரிந்து வாழ்ந்துகொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் தனது குற்றப் பின்னணியை மறைத்துவிட்டு நெருங்கிப் பழகிய ஹேமராஜ் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பணம் பறித்து வந்தான்.

கடந்த 14-4-2024 அன்று ஹேமராஜை சந்திப்பதற்காக ரயிலில் வேலூருக்கு வந்த தீபாவை மலைப் பகுதிக்கு அழைத்து சென்று தனிமையில் இருந்தான். அப்போது தீபா தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு பாறை இடுக்கில் சடலத்தை மறைத்ததான் ஹேமராஜ். இந்தக் கொடூர வழக்கிலும் அவன் கைதானான். ஹேமராஜ் மீதான எல்லா வழக்குகளுமே ரயில் தொடர்புடையவைதான்.

இந்த நிலையில், பெரும் அதிர்வை ஏற்படுத்திய கர்ப்பிணி பெண் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட வழக்கிலும் திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை விரைவாக தாக்கல் செய்யப்பட்டு, விசாரணையும் துரிதமாக நடைபெற்று வந்தது. கடந்த 11-7-2025 அன்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட ஹேமராஜ் `குற்றவாளி’ என நிரூபமானதையடுத்து, நேற்றைய தினம் (ஜூலை 14) தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.

ஹேமராஜ்

அதன்படி, `குற்றவாளி ஹேமராஜ் சாகும் வரை.. அதாவது, வாழ்நாள் முழுவதுமாக சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்’ என கடுமையான ஆயுள் தண்டனைகளை வழங்கிய நீதிபதி, `பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரயில்வே துறையிடமிருந்து ரூ.50 லட்சம், மாநில அரசிடமிருந்து ரூ.50 லட்சம் என மொத்தமாக ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்’ எனவும், `தேவைப்பட்டால் எதிர்கால மருத்துவச் செலவுகள் அனைத்தையும் மாநில அரசே ஏற்க வேண்டும்’ என்றும் தீர்ப்பு வழங்கினார்.

`சிறையிலும் ஹேமராஜிக்கு எந்தவித சலுகைகளையும் வழங்கக் கூடாது’ எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார். இந்தத் தீர்ப்பின்படி குற்றவாளி ஹேமராஜ் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே சிறை லாக்கப்பை விட்டு வெளியே வர முடியும். மீதமுள்ள இருபத்தி மூன்றரை மணி நேரமும் லாக்கப் அறைக்குள்தான் இருக்க வேண்டும். நீதிபதி தீர்ப்பை வாசிக்கும்போதும், அதன் பிறகு சிறைக்கு அழைத்துச்செல்லப்படும்போதும் கூட எந்தவித பதற்றமும் இல்லாமல் காணப்பட்டான் ஹேமராஜ். ஆனாலும், `அவன் மீது கரிசனம் காட்டக் கூடாது’ எனத் தீர்ப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது, பாதிக்கப்பட்ட தரப்பையும், வழக்கை கவனித்த அனைவரையும் நிம்மதி பெரூமூச்சு விடச் செய்திருக்கிறது. இதையடுத்து, சென்னை புழல் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அடைக்கப்பட்டான் கொடூர காமுகன் ஹேமராஜ்.

ஏமன் கொலை வழக்கு; Blood Money-க்கு உடன்பாடு? - கேரள நர்சின் மரண தண்டனை நிறுத்தம்! - பின்னணி என்ன?

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நர்ஸ் நிமிஷா பிரியா (34). நர்ஸிங் படித்துமுடித்த கையோடு 2008-ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். 2011-ம் ஆண்டு தொடுபுழாவைச்... மேலும் பார்க்க

`டேங்கை மாற்றினால் போதுமா; குற்றவாளிகள்?’ - அரசுப் பள்ளி தண்ணீர் தொட்டியில் மலம்; குமுறும் மக்கள்

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்... மேலும் பார்க்க

கோவை: பள்ளி மாணவனை தாக்கி, பாலியல் தொல்லை - இளைஞர் கைது!

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சாமளாபுரம் பகுதியில் 13 வயது மாணவர் வசித்து வருகிறார். அவர் அன்னூர் அருகே அரசு விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு வ... மேலும் பார்க்க

தூத்துக்குடி கொலை வழக்கில் ஜாமீன் பெற்ற இளைஞர் சேலத்தில் படுகொலை.. காவல் நிலையம் அருகே கொடூரம்

தூத்துக்குடி மாவட்டம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் மதன் குமார் (28). இவர் ஒரு மாதத்திற்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த இரட்டை கொலை வழக்கு ஒன்றில் ஜாமின் பெற்று சேலம் மாநகர் அஸ்தம்பட்டி காவல்நிலைய... மேலும் பார்க்க

60 வயது முதியவருக்கு திருமண ஆசை காட்டி மோசடி; ரூ.15 லட்சத்தை சுருட்டிய பூசாரி-நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோயில்வழி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்ப... மேலும் பார்க்க

நிறப்பாகுபாட்டை உடைத்து உலக அழகிப் பட்டம் - ஆப்ரிக்கா வரை சென்ற புதுச்சேரி பெண்ணின் தற்கொலை பின்னணி

மாடலிங் மீதான காதலால் மருத்துவப் படிப்பை துறந்த சங்கரப்பிரியாபுதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான சங்கரப்பிரியா. சிறு வயது முதல் படிப்பில் சுட்டியாக இருந்த சங்கரப் பிரியா, பல சூழல... மேலும் பார்க்க