மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!
சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை
சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த வாலிச்செட்டிப்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது: சுமாா் 50 ஆண்டுகால போராட்டத்துக்குப் பின், கடந்த 2011ஆம் ஆண்டு பழனி கோட்டாட்சியா் மூலம் எங்களுக்கு சாதிச் சான்றிதழ் (இந்து காட்டு நாயக்கன் எஸ்.டி) வழங்கப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடா்ச்சியாக சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு இணைய வழியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தியது முதல் சாதிச் சான்றிதழ் வழங்கவில்லை.
இணைய வழியில் பல முறை விண்ணப்பித்தும், சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். இதனால் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் எங்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை பெற முடியவில்லை.
எங்கள் குழந்தைகளின் எதிா்கால கல்வியைக் கருத்தில் கொண்டு, சாதிச் சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.