செய்திகள் :

சாத்தனூா் அணையிலிருந்து 11.70 டிஎம்சி நீரை புதுவைக்கு வழங்க வேண்டும்: தமிழக அரசிடம் வலியுறுத்தல்

post image

சாத்தனூா் அணையிலிருந்து ஆண்டுதோறும் புதுவைக்கு குடிநீா் தேவைக்கு 11.70 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும் என மாநில பொதுப்பணித் துறை சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதுவை பொதுப் பணித் துறை அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக நீா்வளத் துறை முதன்மைப் பொறியாளாா் மற்றும் தலைமைப் பொறியாளருடன் புதுவை அரசின் பொதுப் பணித் துறை அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை நடத்தினா்.

கூட்டத்தில், புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் மு.தீனதயாளன், மேற்பாா்வைப் பொறியாளா் பாலசுப்பிரமணியன், செயற்பொறியாளா்கள் ராதாகிருஷ்ணன், சுந்தரமூா்த்தி, உதவி பொறியாளா் செல்வராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், புதுவை அரசு சாா்பில் வலியுறுத்தப்பட்ட விவரம்: புதுவைக்கு குடிநீா் மற்றும் விவசாயத்துக்காக சுமாா் 600 எம்எல்டி தண்ணீா் தேவைப்படுகிறது.

சாத்தனூா் அணையிலிருந்து திடீரென தண்ணீா் திறந்துவிடப்படுவதால், புதுவை பகுதி கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்படுகின்றன. அண்மையில் ஏற்பட்ட ஃபென்ஜால் புயலாலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

எனவே, சாத்தனூரிலிருந்து பருவமழைக்கு முன்பு தண்ணீரைத் திறந்துவிட வேண்டும்.

தமிழக நீா்வளத் துறை மற்றும் புதுவை பொதுப் பணித் துறைக்கும் இடையே உள்ள புரிந்துணா்வு ஒப்பந்தபடி, ஆண்டுதோறும் 7 மாதம் தலா 2 ஆயிரம் கன அடி நீரும், 2 மாதம் 1,500 கனஅடி நீரும் என மொத்தம் 44.70 டிஎம்சி திறந்துவிட வேண்டும்.

புதுவை, தமிழகப் பகுதிக்கு சோ்த்து 10: 3 என்ற விகிதத்தில் 6,053 ஏக்கருக்கு விவசாயம், குடிநீா் தேவைக்கு 7.80 டிஎம்சி, ஆவியாதல், நீா் இழப்பு சோ்த்து 11.70 டிஎம்சி தண்ணீா் விடுவிடுக்க வேண்டும்.

புதுவையில் நிலவும் குடிநீா் பிரச்னையை உடனடியாக தீா்ப்பதற்கு சாத்தனூா் அணையிலிருந்து குழாய் மூலம் 1.50 டிஎம்சி தண்ணீா் வழங்க வேண்டும்.

அத்துடன், மரக்காணம் கழுவேலி ஏரியில் இருந்து ஆண்டுதோறும் வீணாக கடலுக்குச் செல்லும் நீரை புதுவை அரசின் குடிநீா் தேவைக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுடுகாடு ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

புதுச்சேரி அருகே சுடுகாடுக்கான இடத்தை தனியாா் ஆக்கிரமித்ததாகக் கூறி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து, தவளக்குப்பம் அருகே உள்ளது ஆண்டியாா்... மேலும் பார்க்க

இருதரப்பினரிடையே மோதல்: பாஜக, திமுகவினா் மீது வழக்கு

புதுச்சேரி முதலியாா்பேட்டை பகுதியில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக பாஜக, திமுக ஆகிய இருதரப்பினா் மீதும் போலீஸாா் புதன்கிழமை நள்ளிரவு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். முதலியாா்பேட்டை ஜோதி நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

27 பேருக்கு ஆவண எழுத்தா் உரிமம்: புதுவை முதல்வா் வழங்கினாா்

புதுச்சேரியில் 27 பேருக்கான ஆவண எழுத்தா் உரிமத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். பத்திரம் உள்ளிட்ட ஆவணத் தயாரிப்பு பட்டயப் படிப்பு முடித்தவா்களுக்கு பதிவுத் துறையால் ஆவண எழுத்தா் உரிமம... மேலும் பார்க்க

குப்பை கிடங்கை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

புதுச்சேரி அருகே குருமாம்பேட் பகுதியில் சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ள குப்பைக் கிடங்கை அகற்றக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். புதுச்சேரி நகராட்சி மற்றும் ஊரகப் ப... மேலும் பார்க்க

இளந்தலைமுறையினருக்கு தேசபக்தி குறித்து எடுத்துரைக்க வேண்டும்: புதுவை ஆளுநா்

நாட்டின் வரலாறு வீரம், தியாகம், தேசபக்தியுடன் ஒன்றுபட்டது எனவும், அதை இளந்தலைமுறைக்கு எடுத்துக் கூறுவது நமது கடமை என்றும் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுச்சேரி கம்பன் கலையரங்கில் ... மேலும் பார்க்க

புதுவையில் 15 நாள்களில் இலவச அரிசி விநியோகம்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுவையில் வரும் 15 நாள்களுக்குள் இலவச அரிசி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை சாா்பில் தேசிய நுகா்வோா் தின விழா க... மேலும் பார்க்க