`நான் இருக்கும் இடத்தில் இடைவிடாத குண்டு சத்தம் கேட்கிறது' - ஜம்மு காஷ்மீர் முதல...
சாத்தூா் பகுதியில் பலத்த மழை: மின்சாரம் துண்டிப்பு
சாத்தூா் பகுதியில் புதன்கிழமை இரண்டாவது நாளாக பலத்த மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததது. இதனால் கிராமப்புறங்களில் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து மின்சாரம் தடைபட்டது.
சாத்தூா் நகா் பகுதியில் சாலையோரங்களில் அமைக்கப்பட்ட புதிய கால்வாய்களில் மழைநீா் செல்ல முடியாமல் சாலையில் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனா். இதேபோல, புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் மழை பெய்தது.
இதற்கிடையே படந்தால், வசந்தம்நகா், தென்றல் நகா், முத்துராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்கிழமை மாலை துண்டிக்கபட்ட மின்சாரம் புதன்கிழமை மாலை வரை விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையை அடுத்து, அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். பின்னா் ஒரு மணி நேரத்துக்கு பிறகு இந்தப் பகுதியில் மின்சார விநியோகம் செய்யபட்டது.