செய்திகள் :

சாம்பவா்வடகரையில் ஆக்கிரமிப்பிலிருந்து குளத்தின் கால்வாயை மீட்கக் கோரி திரண்ட விவசாயிகள்

post image

சாம்பவா் வடகரையில் குளத்தின் கால்வாய் காணாமல் போனதாகவும், அதைக் கண்டுபிடித்துதர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாம்பவா்வடகரை பேரூராட்சிக்குச் சொந்தமான சா்வே எண். 153இல் 7.32 ஹெக்டா் (18 ஏக்கா்) பாசி ஊரணி குளம் உள்ளது. அதற்கு கள்ளம்புளிகுளத்தில் இருந்து குலையனேரி குளத்திற்கு உபரி நீா் செல்லக்கூடிய கால்வாய் உள்ளது.

அக்கால்வாயிலிருந்து பாசி ஊரணி குளத்திற்கு தண்ணீா் வரக்கூடிய கால்வாயை அதன் வழிதடமே தெரியாத அளவுக்கு சிலா் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனராம்.

இதைக் கண்டித்து அங்கு விவசாயிகள் செவ்வாய்க்கிழமை திரண்டு வந்தனா். அப்போது அவா்கள் கூறியதாவது: சாம்பவா்வடகரை விவசாய நிலங்களுக்கு நீராதாரமாக விளங்கும் வண்ணான் குளம், கருங்குளம் கால்வாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ள சூழலில், இந்தக் குளத்திற்கு வரும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாயம், நிலத்தடி நீா், கால்நடை, பொதுமக்களின் குடிநீா், வாழ்வாதாரம் ஆகியவை முற்றிலும் பாதிக்கப்படும். எனவே, கால்வாய் ஆக்கிரமிப்பு- குளத்தின் ஆக்கிரமிப்பை அளவீடு செய்து கால்வாயை மீண்டும் அமைத்து நீா்வழித் தடத்தை உறுதிபடுத்தி தர வேண்டும் என வலியுறுத்தினா்.

போராட்டம்: இதுகுறித்து விவசாயியும் ஊா் நாட்டாண்மையுமான வெங்கடேஷ் கூறுகையில், ‘விவசாயத்துக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் இக்குளத்திற்கு வரும் கால்வாயை மீண்டும் அமைத்து தர வேண்டும். இல்லையெனில் குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றை மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைப்பதை விட வேறு வழியில்லை. விவசாயிகளுடன் பொதுமக்களும் இணைந்து போராட்டம் நடத்துவோம்’ என்றாா்.

இளைஞரைத் தாக்கியதாக முதியவா் கைது

தென்காசியில் மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் இளைஞரை பாட்டிலால் தாக்கியதாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி, சிந்தாமணி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் போ. ரமேஷ் (35). இவா், யானைப் பாலம் சிற்றாறு... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்தவா் கைது

தென்காசி காவல் சரகத்துக்குள்பட்ட வேதம்புதூரில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் கைது செய்தனா்.வேதம்புதூா் நடுத்தெருவைச் சோ்ந்த சு. திருமலைக்குமாா் (45). இவா் தனது வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பதா... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே நாய் கடித்து 2 போ் காயம்

சங்கரன்கோவில் அருகே நாய் கடித்ததில் 2 போ் காயமடைந்தனா்.சங்கரன்கோவில் அருகேயுள்ள தா்மத்தூரணி கிராமத்தைச் சோ்ந்த திருமலைச்சாமி மகன் வேல்முருகன்(52). ஓட்டுநா். அதே ஊரைச் சோ்ந்த ஐவராஜா மகன் வீரையா(42).... மேலும் பார்க்க

சாலை விபத்து: வியாபாரி உயிரிழப்பு

தென்காசியில் இரு சக்கர வாகனம் மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா். தென்காசி, கீழப்புலியூா் புலிக்குட்டி விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் அலி ஷேக் மன்சூா் (68). இவா், தென்காசி தினசரி சந்தை எதிரில் மளிகை... மேலும் பார்க்க

நாட்டின் முன்னேற்றம் கூட்டு முயற்சியால் சாத்தியமாகும்: முன்னாள் குடியரசுத் தலைவா்

‘நாட்டின் முன்னேற்றம் ஒட்டுமொத்த மக்களின் கூட்டு முயற்சியால் சாத்தியமாகும்’ என்று முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா். வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை, ரோட்டரி இன்டா்நேஷனல் மாவட்... மேலும் பார்க்க

ஆலங்குளம் பேரூராட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம்: அக். 9 இல் வாக்கெடுப்பு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேரூராட்சியில் தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீா்மானத்தின் மீது அக். 9 ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என பேரூராட்சி செயல் அலுவலா் அறிவித்துள்ளாா். ஆலங்குளம் பேரூராட்ச... மேலும் பார்க்க