சாம்பியன்ஸ் டிராபிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
சாம்பியன்ஸ் டிராபிக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 31) அறிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் டிராபிக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், பாகிஸ்தான் அணி மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 31) அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
Pakistan name ICC Champions Trophy 2025 squad
— PCB Media (@TheRealPCBMedia) January 31, 2025
Details here ➡️ https://t.co/XfswdRVWrO#WeHaveWeWill | #ChampionsTrophypic.twitter.com/kGA9hJr4dV
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்
முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் அசாம், ஃபகர் ஸமான், கம்ரான் குலாம், சௌத் ஷகீல், தையாப் தாஹிர், ஃபாஹீம் அஷ்ரஃப், குஷ்தில் ஷா, சல்மான் அலி அகா (துணைக் கேப்டன்), உஸ்மான் கான், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரௌஃப், முகமது ஹஸ்னைன், நஷீம் ஷா மற்றும் ஷாகின் ஷா அஃப்ரிடி.