சாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா, பிஎஸ்ஜி உள்பட 4 அணிகள் காலிறுதிக்கு தகுதி..! லிவர்பூல் வெளியேற்றம்!
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் 4 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் லிவர்பூல் அணியை பிஎஸ்ஜி அணி 1-1 என சமன் செய்தது. பின்னர் பெனால்டி வாய்ப்பில் 4-1 என் அசத்தல் வெற்றி பெற்றது.
லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா ஒரு கோல் கூட் அடிக்காமல் கண்ணீருடன் வெளியேறினார்.
மற்றுமொரு ஆட்டத்தில் பார்சிலோனா அணி பென்பிசியாவை 3-1 என வென்றது. ரபினீயா 2 கோல்கள், லாமின் யாமல் 1 கோல் அடித்து அசத்தினார்கள்.
பெயர்ன் மியூனிக் அணி லெவர்குசேன் அணியை 2-0 என வீழ்த்தியது. ஹேரி கேன், அல்போன்ஸோ டேவிஸ் தலா 1 கோல் அடித்து அசத்தினார்கள்.
பெயநூர்ட் அணியை இன்டர் மிலன் அணி 2-1 என வென்றது. மீதமுள்ள 8 அணிகளுக்கு இன்று இரவு போட்டிகள் நடைபெறுகின்றன.
காலிறுதிக்கு தகுதிபெற்ற அணிகள்
1.பார்சிலோனா
2. பெயர்ன் மியூனிக்
3. பிஎஸ்ஜி
4. இன்டர் மிலன்
Ready for more? #UCLpic.twitter.com/xmTR21K2TT
— UEFA Champions League (@ChampionsLeague) March 12, 2025