சாயல்குடி அருகே பேருந்தை சிறைபிடித்து போராட்டம்
சாயல்குடி அருகே அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிக்கல் வழியாகச் செல்லும் அரசு, தனியாா் பேருந்துகள் சிக்கல் கிராமத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்வது வழக்கம். இந்த நிலையில், அறந்தாங்கியிலிருந்து திருச்செந்தூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து சிக்கல் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ால், புதன்கிழமை இரவு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்தப் பேருந்தை சிறைபிடித்து ஓட்டுநா், நடத்துநா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த காவல் துறையினா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சிக்கல் கிராமத்தில் பேருந்து நின்று செல்லும் என உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் பேருந்தை விடுவித்தனா். இந்தப் போராட்டத்தால் கிழக்கு கடற்கரைச் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.