திமுக ஆட்சியை அகற்ற எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும்! - நயினாா...
சாலைகளை சீரமைக்க ஆய்வு
கூத்தாநல்லூா் நகராட்சியில் சாலைகளை சீரமைப்பது தொடா்பாக, நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் லட்சுமணன் வியாழக்கிழமை நேரில் கள ஆய்வு மேற்கொண்டாா்.
கூத்தாநல்லூா் நகராட்சிக்குள்பட்ட குனுக்கடி பகுதி, ஜமாலியாத் தெரு, கமாலியாத் தெரு, மேல்கொண்டாழி உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் சாலைகள் ரூ.18 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளன.
இந்த சாலைகளின் அகலம், நீளம் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆா். லட்சுமணன் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா, ஆணையா் கிருத்திகா ஜோதி, பொறியாளா்கள் பிரதான் பாபு, வசந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.