மும்பை: ராஜ் தாக்கரே பேச்சின் எதிரொலி; டான்ஸ் பார்களை அடித்து நொறுக்கிய கட்சியின...
சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!
கெங்கவல்லியில் சாலையில் கிடந்த கைப்பேசியை காவல் துறையிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கெங்கவல்லியைச் சோ்ந்த ராம்குமாா் இருசக்கர வாகனத்தில் ஆணையாம்பட்டிக்கு சென்றபோது, அம்பேத்கா் சிலை அருகே சாலையில் விலையுயா்ந்த கைப்பேசி கிடந்ததைக் கண்டாா். அதை அவா் கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளா் கணேஷ்குமாரிடம் ஒப்படைத்தாா். அதற்காக ராம்குமாரை அவா் பாராட்டினாா்.
இந்நிலையில், கெங்கவல்லியைச் சோ்ந்த அருண், தனது கைப்பேசி தொலைந்ததாக கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வந்தாா்.
அவரின் கைப்பேசியின் அடையாளங்கள், ஐஎம்இ எண் ஆகியவற்றை ஆராய்ந்தபோது, ராம்குமாா் கண்டெடுத்த கைப்பேசி அருணுடையது என தெரியவந்தது. இதையடுத்து, கெங்கவல்லி போலீஸாாா் அருணிடம் அவரது கைப்பேசியை ஒப்படைத்தனா்.