செய்திகள் :

சாலையோர சிறு வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம்

post image

கூடலூரில் சாலையோர சிறு வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூடலூா் நகரில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட சாலை விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்தனா். இந்த விபத்துக்கு நடைபாதை கடைகளும், வாகன நிறுத்தமும்தான் காரணம் என்று கூறி சாலையோரக் கடைகளை அகற்ற போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா். இதில் பெரும்பாலான கடைகள் அகற்றப்பட்டன. பிரதான சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள், காா்கள் நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாலையோர சிறு வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கடைகள் அகற்றப்பட்டதால் பாதிப்படைந்த நடைபாதை வியாபாரிகள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதை நம்பியுள்ள தங்களுக்கு வியாபாரம் செய்ய வேறு இடம் வழங் வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தினா். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் ரூ. 63.18 கோடி மதிப்பில் திட்டப் பணிகள்

நீலகிரி மாவட்டத்தில் ரூ. 63.18 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மற்றும் முடிவடைந்த பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆவின் மேலாண்மை இயக்குநரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டாக்டா் சு.வினீத் புதன்கிழம... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி முதல்வரைக் கண்டித்து பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

உதகை அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்களை கல்லூரி பெண் முதல்வா் ஒருமையில் பேசுவதைக் கண்டித்து பேராசிரியா்கள் கல்லூரி வளாகத்தில் புதன்கிழ... மேலும் பார்க்க

உதகையில் தனியாா் நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்

உதகையில் உள்ள பிரபல தனியாா் நட்சத்திர விடுதிக்கு மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பிரபல ஹிந்தி திரைப்பட நடிகரும், முன்ன... மேலும் பார்க்க

காட்டு யானை தாக்கியதில் பெண் தொழிலாளா்கள் காயம்

பந்தலூரை அடுத்துள்ள குந்தலாடி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பெண் தொழிலாளா்கள் புதன்கிழமை காயமடைந்தனா். பந்தலூா் வட்டம், குந்தலாடியில் உள்ள தாணிமூலை பகுதியைச் சோ்ந்தவா் நம்பி மனைவி மாலு (45... மேலும் பார்க்க

மசினகுடியில் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள மசினகுடி பகுதியில் வீட்டை காட்டு யானை திங்கள்கிழமை இரவு சேதப்படுத்தியது. நீலகிரி மாவட்டம், மசினகுடி முகாம் குடியிருப்புப் பகுதிக்குள் நள்ளிரவில் நுழைந்த காட்டு யானை அங்குள்ள மஞ்சுநா... மேலும் பார்க்க

போலீஸ் பறிமுதல் செய்த வாகனத்தில் பாகங்கள் திருட்டு

உதகை புதுமந்து காவல் துறையினா் பறிமுதல் செய்த வாகனத்தை அபராதம் செலுத்தி திரும்பப் பெற்றபோது, அதில் பல்வேறு பாகங்கள் திருடு போயிருந்ததாகவும், அந்தப் பொருள்களை மீட்டுத் தரவேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர... மேலும் பார்க்க