சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க கோரிக்கை
சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவிநாசியில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சேவூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி கடை, உணவகங்கள், பழக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு சாலையோரக் கடைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்துமாறு
அவிநாசி நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஒலிபெருக்கி மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு சிஐடியூ சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் கண்டனம் தெரிவித்துள்ளனா். மேலும், சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கான நகராட்சிக் குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.