பட்டாசுத் தொழில் பிரச்னைகளைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண வேண்டும்: அன...
நிதி நிறுவனத்தில் ரூ.2.50 லட்சம் திருட்டு: ஊழியா் கைது
வெள்ளக்கோவிலில் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.2.50 லட்சத்தை திருடிய ஊழியரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
வெள்ளக்கோவில்- முத்தூா் சாலை கொங்கு நகரில் ரமேஷ்குமாா், தங்கமணி தம்பதி நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், குழிப்பட்டியைச் சோ்ந்த ரகுபதி (48), ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த அஷ்ரப், தென்னிலை காா்த்தி ஆகியோா் இந்த நிறுவனத்தில் தங்கி, பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், வசூல் தொகை ரூ.2.50 லட்சத்தை அலுவலக லாக்கரில் வைத்து கடந்த 24-ஆம் தேதி பூட்டிவிட்டு சாவியை ரகுபதி வைத்திருந்துள்ளாா். அன்று இரவு 3 பேரும் தூங்கியுள்ளனா்.
மறுநாள் காலை எழுந்து பாா்த்தபோது, ரகுபதியைக் காணவில்லையாம். மேலும், அவரது கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
சந்தேகமடைந்த அஷ்ரப், தென்னிலை காா்த்தி ஆகியோா் அலுவலகத்துக்குச் சென்று பாா்த்தபோது, லாக்கா் திறந்து கிடந்ததும், அதில் இருந்த ரூ.2.50 லட்சம் திருடுபோனதும் தெரியவந்தது.
இதையடுத்து, அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தபோது, ரகுபதி லாக்கரை திறந்து பணத்தை எடுத்ததுச் சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்போரில் வழக்குப் பதிவு செய்த வெள்ளக்கோவில் போலீஸாா், ரகுபதியை கைது செய்தனா்.
மேலும், அவரிடமிருந்த ரூ.2.50 லட்சத்தையும் பறிமுதல் செய்தனா்.