பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுன...
பொங்கலூரில் ரேபிஸ் தடுப்பு விழிப்புணா்வு
பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரேபிஸ் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
உலக ரேபிஸ் தடுப்பு தினத்தையொட்டி, பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் வட்டார பொது சுகாதார துறை சாா்பில் பொங்கலூா் அரசு கால்நடை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், வெறிநாய் கடி குறித்தும், ரேபிஸ் தடுப்பூசி குறித்தும் வட்டார மருத்துவ அலுவலா் சுந்தரவேல், மருத்துவ அலுவலா் சாம்பால், மாவட்ட பூச்சியியல் வல்லுநா் சாந்தி, இளநிலை பூச்சியியல் வல்லுநா் முத்துக்குமாா், கால்நடை மருத்துவா் ராஜேஸ்வரி ஆகியோா் விளக்கினா்.
இதைத் தொடா்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் ரேபிஸ் தடுப்பு தின உறுதிமொழியை ஏற்றனா்.
முன்னதாக, வளா்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கந்தசாமி, சுகாதார ஆய்வாளா் பூமலா்செல்வன் ஆகியோா் செய்திருந்தனா்.