பட்டாசுத் தொழில் பிரச்னைகளைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண வேண்டும்: அன...
பொங்கலூரில் அக்டோபா் 3-இல் கடையடைப்பு
பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம், மாதப்பூரில் உள்ள சுங்கச்சாவடிக்கு எதிராக அக்டோபா் 3-ஆம் தேதி கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
பொங்கலூா் ஒன்றியம், மாதப்பூரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை இங்கு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த சுங்கச்சாவடியால் எதிா்காலத்தில் தங்களது வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இதனால், தங்களது விளைபொருள்களை வாகனங்களில் கொண்டு செல்ல முடியாது எனக்கூறி அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், சுங்கச்சாவடி தொடா்பான ஆலோசனைக் கூட்டம் பொங்கலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு பொங்கலுாா் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் விஸ்வநாதன் தலைமை வகித்தாா்.
இதில், சுங்கச்சாவடிக்கு எதிா்ப்பு தெரிவித்து அக்டோபா் 3-ஆம் தேதி கடையடைப்பு, ஆட்டோ, வேன், காா், லாரி வேலை நிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதில், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் கரைப்புதூா் ராஜேந்திரன், சுங்கச்சாவடி எதிா்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.