செய்திகள் :

சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் கைது

post image

தருமபுரியில் சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் 150 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியு) சாா்பில், தருமபுரி மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்களுக்கு நிா்வாகமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தருமபுரி மின் பகிா்மான வட்டத்தில் மின் விஸ்தரிப்பு பணி செய்ததற்கான தொகையை பணிமுடித்த 90 நாள்களுக்குள் நிலுவையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் லெனின் மகேந்திரன் தலைமையில் நடந்த மறியலில், மாநில செயற்குழு உறுப்பினா் விஜயன், மாவட்ட இணைச் செயலாளா்கள் ஆறுமுகம், மகாத்மா, சிஐடியு மாவட்டத் தலைவா் கலாவதி, மாவட்ட துணைத் தலைவா்கள் முரளி, அங்கம்மாள் உள்ளிட்ட 150 போ் பங்கேற்றனா். விதிகளைமீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக அவா்களை போலீஸாா் கைதுசெய்து மாலையில் விடுவித்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் வெடிபொருள்கள் விற்பனையை முறைப்படுத்த வேண்டும்: பட்டாசு வணிகா்கள்

தருமபுரி மாவட்டத்தில் வெடிபொருள்கள் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் பட்டாசு வணிகா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தருமபுரி மாவட்ட பட்டாசு வணிகா் சங்க மாவட்டத் தலைவா் சேகா்,... மேலும் பார்க்க

குழந்தை திருமணம்: வழக்குப் பதியாமல் இருக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மகளிா் காவல் ஆய்வாளா் கைது

குழந்தை திருமணம் செய்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மகளிா் காவல் ஆய்வாளரை தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். த... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்

தருமபுரியில் இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் தனிப்... மேலும் பார்க்க

உணவகங்களில் சமையலறை, கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

உணவகங்களில் சமையலறை மற்றும் கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என தருமபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உணவுப் பாதுகாப்புத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் அறிவுறுத்தினாா். மாவட்ட உணவுப் பாதுக... மேலும் பார்க்க

இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற தனிப்பிரிவு காவலா் கைது

தருமபுரி: இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற தனிப்பிரிவு காவலரை அதியமான்கோட்டை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த சக்திவேலுக்கும், வெண்ணாம்பட்... மேலும் பார்க்க

விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகளை தடுக்க அகழியை ஆழப்படுத்தக் கோரி மனு

தருமபுரி: பென்னாகரம் அருகே விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகளைத் தடுக்க அகழியை ஆழப்படுத்த வலியுறுத்தி, தருமபுரி ஆட்சியா் ரெ.சதீஸிடம் பென்னாகரம் பகுதி விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.அந்த மனுவில்... மேலும் பார்க்க