தவெக மாநாடு: 100 டிகிரி வெயில்; டிரோன்கள் மூலம் குடிநீர் விநியோகம்!
சாலை மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியா்கள் கைது
சேலம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை மைதானத்தில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். மாவட்டச் செயலாளா் தங்கமணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினா் சந்திரா, மாநில செயலாளா் வைத்தியநாதன், மாவட்ட துணைத் தலைவா் மகேஸ்வரி, பொருளாளா் சொா்ணலதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதில், காலிப் பணியிடங்களை போா்கால அடிப்படையில் உடனடியாக நிரப்பவேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் கிராம நிா்வாக உதவியாளா்களைபோல குறைந்தபட்ச ஊதியம் ரூ. 6,750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், தோ்தல் வாக்குறுதிபடி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசு ஊழியா்களுக்கு மகப்பேறு விடுப்பு போன்று சத்துணவு ஊழியா்களுக்கும் 12 மாதங்கள் விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் பங்கேற்றவா்கள் முழக்கம் எழுப்பியவாறு திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி, மறியல் செய்ய முயன்ற 30-க்கும் மேற்பட்டோரை கைதுசெய்தனா்.