விவசாயிகள் பிரச்னைக்கு விரிவான ஆய்வு: குடியரசு துணைத் தலைவா் தன்கா் வலியுறுத்தல்
சாலை மறியல்: 31 போ் கைது
தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவா் நாகை திருவள்ளுவன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட 31 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவா் விழுந்து 17 போ் உயிரிழந்த நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் காவல் துறை அனுமதியின்றி ஊா்வலம் செல்ல முயன்ற தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவா் நாகை திருவள்ளுவன் கைது செய்யப்பட்டாா்.
இதைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்க வலியுறுத்தியும் தேனி, நேரு சிலை அருகே தமிழ்ப்புலிகள் கட்சியின் தேனி கிழக்கு மாவட்டச் செயலா் அலெக்சாண்டா் தலைமையில் அந்தக் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது மறியலில் ஈடுபட்ட 31 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.